Posts

Showing posts from February, 2022

ங ப்போல் வளை

Image
  ங ப்போல் வளை.  புது வருடம் பிறந்து விட்டது. எப்போதும் பனியில் நனைந்தபடி பிறக்கும் வருடம், இந்த வருடம், அடாத மழையின் தொடர்ச்சியாக வந்த மூன்று நாள் மழையில் குளித்தபடி பிறந்தது. " ஆத்தாடியாத்தி, எந்த வருசமும் இப்படி மழையைப் பார்த்ததில்லையடி ஆத்தா. கார்த்திகை கழிஞ்சாலே, கடும் மழை இல்லையிம்பாக, இப்ப என்னடான்னா, மார்கழி பிறந்தும்ல மழை கொட்டுது" என இயற்கையை வியந்தபடி பூவாத்தா வாசலை எட்டிப் பார்க்க, அவரது மூத்த பேரன் மனைவிகள் இருவரும், மெனக்கெட்டு ஒரு மணி நேரமாகப் புள்ளி வைத்துப் போட்டிருந்த பூக்கள் நிறைந்த வண்ணக் கோலம், கரைந்து தூரிகையால் ஆங்காங்கே துடைத்து விட்ட மாடர்ன் ஆர்ட் போல் வண்ணக் கலவைகள் தங்களுக்குள் கை கலந்து உரு மாறி நின்றன. கையில் காப்பிக் கோப்பையோடு, உருமாறிய கோலத்தையே , வராண்டா வழியே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பூவாத்தாவின் கடைசிப் பேரன் மனைவி வைசாலி. " இது என்னடி அதிசயமா, அசலூர்காரி இங்கனை உட்கார்ந்திருக்கா" என அடுத்த அதிசயமாய்ப் பார்த்தார் பூவாத்தா. அவர் குரல் கேட்டும் கண்கள், கரைந்த கோலத்தின் வண்ணத்தில் உரைந்திருக்க, மனதில் பல்வேறு எண்ணங்களை ஓட்டி