Posts

மணிக்குயில்- கவிதைச் சரம்-2

       மணிக்குயில்- கவிதைச் சரம்-2 ஆவி துடிக்குதடி! பொக்கை வாய் காட்டி சிரித்த- பூஞ்சிட்டை, தாவிப் பாய்ந்து அடம்பிடித்த- பூந்தளிரை  யானையாக்கி சவாரி செய்த -பூங்கொடியை  மாமன் மகளெனவே மடி சுமந்த-பூந்தாரையை  குழந்தையெனவே கொஞ்சி குழவிய -பூமயிலை  மஞ்சள் பூசி மலர்ந்து நின்ற -பூவிழியாளை  கண்ட நாள் முதலாய் …  கவிதைச் சொல்லிக் கட்டியணைக்க  ஆவி துடிக்குதடி ! 2.அரையாடையில் அள்ளிக் கொஞ்சிய  பதுமையை  பட்டுச் சொக்காய் உடுத்தி பறந்து திரிந்தவளை  உரிமையாய் அதட்டி மிரட்டி தூக்கிச் சுமந்தவளை  பாவாடை தாவணியில் பார்த்த நாள் முதலாய்… என்னுள் பருவ மாற்றம்.  காணாமல் காண.  மௌனமாய் சீண்ட  பார்வையாள் தொடர  கள்ளமாய் ரசிக்க  ஆவி துடிக்குதடி ! 3.உன்னை தூக்கிச் சுமக்கவும்,  கூட்டிச் செல்லவும்  மாமன் நானிருக்கையில்  மிதிவண்டி உனக்கெதுக்கு  பூங்குயிலே! மிதிவண்டி  மிதித்து - நீ  பழகும் முன்னே ,  சறுக்கி விழுந்து, சதை பெயர்ந்து  இரத்தக் கரையோடு- நீ  விக்கி அழுகையில் , நெஞ்சில் அணைத்து ஆறுதல் சொல்ல  ஆவி துடிக்குதடி ! 4.தலைக் குளித்து தளரப் பின்னலிட்டு  மயக்கும் மல்லிகைச் சூடி  மங்கை நீ பேருந்தில் பயணிக்க மெய்காவலனாய் பக

மணிக்குயில்- கவிதைச் சரம்-1

      மணிக்குயில்- கவிதைச் சரம்.  உன்மத்தம் ஆகுதடி! உன் ஓரவிழிப் பார்வை,  உள்ளம் உரசிச் செல்கையில்,  அன்பெனும் செல்வத்தையே  அகமெல்லாம் நிறைத்தவனின்  உள்ளமது  - அவள் உள்ள மனது உன்மத்தம் ஆகுதடி.   குயிலோசையில் மனம் லயித்தவர்,  ஆயிரமமாயிரம்  உண்டு.  பூங்குயில் ஓசையில் மனம் தொலைத்தவன்  அவன்  மட்டுமே!  அவளின் ... ஆசை மாமன் மட்டுமே! "மாமா" எனும்,  அவள் சொல்லோசையில் , மது உண்டு   மயங்கி நின்ற  மதி போல் ... உள்ளமது  - அவள் உள்ள மனது உன்மத்தம் ஆகுதடி.   சேயாய் அவளிருக்கையிலேயே  சுகமாய்  தூக்கிச் சுமந்தவன்,  தளிராய் அவள் நடக்கையில்  விழாமல் தாங்கிப் பிடித்தவன்,  அவள் பள்ளிச் செல்கையில்  காவலனாய் சேவகம் செய்தவன்,  கொள்ளை அழகாய் - அவன் மனதை  கொள்ளைக் கொண்ட அழகாய், அவளைப் பார்க்கையில்  உள்ளமது  - அவள் உள்ள மனது உன்மத்தம் ஆகுதடி.   பூவாய்  மலர்ந்தவளுக்கு  குச்சுக் கட்டி குடிசை தந்தவன் ! பச்சை ஓலை வழியே  பசும் மஞ்சள் பூசி  மருண்ட விழியோடு  பூத்து நின்றவளை, கண்ட நாள் முதல் ... அவன் உள்ளம் துளைத்து  உள்ளமதில் குடி புகுந்தவளை  நினைவில் நிறுத்துகையில் , உள்ளமது  - அவள் உள்ள மனது உன்மத்தம் ஆகுதட

புன்னகை

Image
    புன்னகை மனம் மகிழும் தருவாயில் அகம் மலர்ந்து அவதரிக்கும் அதரம் சிந்திய முத்து புன்னகை! அழுது பிறந்த உயிர்கள் மகிழ படைத்தவன் தந்த பரிசு,பல் வரிசை தெரிய விரியும் புன்னகை! அரும்பின் கனவில் ஆனந்தம் மறை பொருளாய் நின்ற மாயன் தந்ததோ பச்சிளம் புன்னகை! சுற்றம் பழகி சொந்தம் பழகி வேடிக்கை விளையாடி விளைந்ததோ செல்லக் குழந்தை குதூகலப் புன்னகை! தானே ஆடித் திரிந்து ஓடி மகிழ்ந்து தோழியர் சூழ ஆனந்த ஆட்டம் இயல்பாய் வந்ததோ பதின்மப் புன்னகை! கண்ணாளன் காண காணாது மறைந்து காணாத பொழுது கண்டு நெகிழ்ந்து கனிந்து வந்ததோ கன்னிப் புன்னகை! மணம் புரிந்து கலவித் திரிந்து அகநானூறும் பயின்று நாணி நயமாய் விரிந்ததோ நங்கையர் புன்னகை! தாய்மை சுமந்து தளர்ந்து அமர்ந்து தானே பிளந்து வலித்துப் பெற்று பிள்ளை முகம் காணுமோ தாய்மையின் புன்னகை! இல்லறம் நடத்தும் நல்லறத் துணை அவள் இன்பம் துன்பம் யாவும் கண்டு என்றும் மாறாததோ தைரியப் புன்னகை! தளர்ந்த வயதில் தள்ளாது நின்றாலும் கைதலம் பற்றியவர் தோள் கொடுத்து துணையாக வந்ததோ அனுபவப் புன்னகை! கைலாயம் நோக்கி காத தூரம் பறந்த போதும் உயிர் தாங்கிய மேனியில் உறைய விட்டு மாறாது நின்றதோ அந்த சாந

நவரசம்

Image
  நவரச ம் 1.கோபம்  எனதும்,உனதும், உலகிதும் ஆன இயலாமையின் இயல்பான வெளிப்பாடு  எதையோ மாற்றத்துடித்து  இயலாது  வந்த துடிப்பின் வெடிப்பு  ஏதேனும் செய்வோமோ எனும்  எண்ணத்தின் பிரதிபலிப்பு  எதையோ செய்துவிட்டு பின்  அணுவணுவாய் அதன் தவிப்பு  உடல் நடுங்கும் சிலவேளை  ஓங்கி ஒலிக்கும் குரல்வலை  கண்கள் சிவக்கும் பளபளப்பில்  காய்ந்து வடியும் கண்ணீரும்  நெஞ்சம் கொதித்து தகிக்கும்  அடிவயிறும் அலறும்  நரம்புகளின் புடைப்பும்  வார்த்தைகளின் தடிப்பும்  கண்களின் எரிப்பும்  நிற்கட்டும் ஓர்கணம்  குணத்தோடு உரையாடி  கோபத்தை ஜெயித்திடுவோம்  ************************************************************** 2.அச்சம்  அச்சம் இல்லை அச்சம் இல்லை  எனப் பாட நான் ஒன்றும்  முண்டாசுக் கவி பாரதி இல்லை  ஒன்றை பெரும் விருப்பும்  அதை தொலைப்பேனோ எனும்  அச்சம் கொண்ட பாவை தான்  ஒளி மறைத்த இருளும்  எனை ஆட்டிப் படைக்கும்  ஓராயிரம் கற்பனையாய்  வந்து வாட்டி வதைக்கும்  ஓரறிவு உயிர் முதலாய் யாவும்  ஆறறிவு படைத்த  என்னையும்  வகை வகையாய் பயப்படுத்தி  எள்ளி நகைத்திருக்கும்  அறிவற்ற ஜடப் பொருளானாலும்   அன்னம் ஆக்கி தரும் பாத்திரமும்  பிகிலடி

விதைப் பயணம்

Image
  விதைப் பயணம் மண் துளைத்து வெளிவந்து முளை விட்டுத் துளிர்த்து செடியாகும் முயற்சியில்  முன்னேறும் விதைப் பயணம்! இன்னும் இரண்டு இலை சேரட்டும் ,செடி என தன்னை அறிவித்துக்கொள்ள சிறிது வளர்ந்த பின்னே விதைத்தவனும் நீர் வார்த்தவனும் அறியாமல் அவன் கண் மறைத்து இலைகள்,கிளைகள் சில மொட்டுகள் பூ வென சடுதியில் வளர்ந்துவிடும்! முளை விடும் போதே பச்சையம் தயாரித்து தானே பசியார அறிந்தது பருவம் வரும் போது பக்குவமாய் காய்த்து கனிந்து மனம் பரப்பும் விதைப் பயணம் ! விண் தொடும் முயற்சி போல் விரைந்து வளர்ந்து நிற்க படர்ந்த அதன் உருவில் பசியாறியவை பல உயிர்கள் கூடு தேடியவை பல உயிர்கள் பல்லுயிர்கள் நலம் நாடும் பயனுள்ளதாய் வடிவெடுத்த விதைப் பயணம் போல் கனிந்து வீழ்ந்தும் விருட்சமாய் புணர்ஜென்மம் எடுக்கும் விதைப் போல் பயனுள்ளதாய் அமையட்டும் மனிதப் பயணம்!

ஒளி தேவை

Image
  ஒளி தேவை பச்சை வண்ணக் கொடி! மண்ணில் பிறந்தது கூரை எட்டி மணம் பரப்ப  படர பிடி வேண்டும் மரமோ மட்டையோ இரும்பு தண்டமோ இறுக்கிக் கட்ட கயிறு இது தான் வேண்டும் எனும் அடம் இல்லை! நீர் வேண்டும் அது மழை நீரோ பனி நீரோ நிலத்தடி நீரோ ஏதோ இது தான் வேண்டும் எனும் அடம் இல்லை! ஒளி வேண்டும் மின் விளக்கோ மின்மினிஒளியோ மெழுகு ஒளியோ இல்லை இது தான் வேண்டும் எனும் அடம் உண்டு! அரும்பை மலர்விக்கும் சக்தி எதில் உண்டோ புவி உருளை தினம் தினம் சுழன்று தருகிறதோ மௌன விரதம் கொண்ட கொடிகள் மணம் விட்டு பேச துடிக்கும் தலைவன் யாரோ அவன் தரும் ஒளி வேண்டும்! மங்கியதோர் ஒளியேனும் சிறு பார்வை முகம் காட்டி மேகத்தில் மறைந்தாலும் அவன் தரும் ஒளி வேண்டும்!

கோடை மழை காரணம்!

Image
கோடை மழை காரணம்! சித்திரை மாத கத்திரி வெயில் கண்டு சூட்டு நோய்களை எதிர்கொள்ள தயாராய் வறண்ட தேகத்துடன் காத்திருந்த நேரம்  அமிர்தம் போல் ஒரு கோடை மழை   காற்றழுத்த தாழ்வு நிலை காரணம் என வானிலை அறிக்கை சொல்ல, மன்மத வருடம் வந்ததால் என சோதிட அன்பர்கள் சொல்ல -இவை   எதுவும் இல்லை என்னால்தான் என்பேன் நான். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்ற கூற்றின் அடிப்படையில் என் கர்வம் காரணமா -அதுவும் இல்லை,   மல்லி ,மிளகாய் மசாலா அரைக்க வாங்கி வைத்தேன் வற்றல் வடகம் போட்டு வைக்க ஆயத்தம் செய்தேன் இதுவரை செய்யாத புது வித சோதனை கண்டு என் வீட்டாரை காக்கவென்றே வந்தது கோடை மழை!