Posts

Showing posts with the label மணிக்குயில்

மணிக்குயில்- கவிதைச் சரம்-2

       மணிக்குயில்- கவிதைச் சரம்-2 ஆவி துடிக்குதடி! பொக்கை வாய் காட்டி சிரித்த- பூஞ்சிட்டை, தாவிப் பாய்ந்து அடம்பிடித்த- பூந்தளிரை  யானையாக்கி சவாரி செய்த -பூங்கொடியை  மாமன் மகளெனவே மடி சுமந்த-பூந்தாரையை  குழந்தையெனவே கொஞ்சி குழவிய -பூமயிலை  மஞ்சள் பூசி மலர்ந்து நின்ற -பூவிழியாளை  கண்ட நாள் முதலாய் …  கவிதைச் சொல்லிக் கட்டியணைக்க  ஆவி துடிக்குதடி ! 2.அரையாடையில் அள்ளிக் கொஞ்சிய  பதுமையை  பட்டுச் சொக்காய் உடுத்தி பறந்து திரிந்தவளை  உரிமையாய் அதட்டி மிரட்டி தூக்கிச் சுமந்தவளை  பாவாடை தாவணியில் பார்த்த நாள் முதலாய்… என்னுள் பருவ மாற்றம்.  காணாமல் காண.  மௌனமாய் சீண்ட  பார்வையாள் தொடர  கள்ளமாய் ரசிக்க  ஆவி துடிக்குதடி ! 3.உன்னை தூக்கிச் சுமக்கவும்,  கூட்டிச் செல்லவும்  மாமன் நானிருக்கையில்  மிதிவண்டி உனக்கெதுக்கு  பூங்குயிலே! மிதிவண்டி  மிதித்து - நீ  பழகும் முன்னே ,  சறுக்கி விழுந்து, சதை பெயர்ந்து  இரத்தக் கரையோடு- நீ  விக்கி அழுகையில் , நெஞ்சில் ...

மணிக்குயில்- கவிதைச் சரம்-1

      மணிக்குயில்- கவிதைச் சரம்.  உன்மத்தம் ஆகுதடி! உன் ஓரவிழிப் பார்வை,  உள்ளம் உரசிச் செல்கையில்,  அன்பெனும் செல்வத்தையே  அகமெல்லாம் நிறைத்தவனின்  உள்ளமது  - அவள் உள்ள மனது உன்மத்தம் ஆகுதடி.   குயிலோசையில் மனம் லயித்தவர்,  ஆயிரமமாயிரம்  உண்டு.  பூங்குயில் ஓசையில் மனம் தொலைத்தவன்  அவன்  மட்டுமே!  அவளின் ... ஆசை மாமன் மட்டுமே! "மாமா" எனும்,  அவள் சொல்லோசையில் , மது உண்டு   மயங்கி நின்ற  மதி போல் ... உள்ளமது  - அவள் உள்ள மனது உன்மத்தம் ஆகுதடி.   சேயாய் அவளிருக்கையிலேயே  சுகமாய்  தூக்கிச் சுமந்தவன்,  தளிராய் அவள் நடக்கையில்  விழாமல் தாங்கிப் பிடித்தவன்,  அவள் பள்ளிச் செல்கையில்  காவலனாய் சேவகம் செய்தவன்,  கொள்ளை அழகாய் - அவன் மனதை  கொள்ளைக் கொண்ட அழகாய், அவளைப் பார்க்கையில்  உள்ளமது  - அவள் உள்ள மனது உன்மத்தம் ஆகுதடி.   பூவாய்  மலர்ந்தவளுக்கு  குச்சுக் கட்டி குடிசை தந்தவன் ! பச்சை ஓலை வழியே  பசும்...