Posts

Showing posts with the label எழுத்துக் கோர்வை

புன்னகை

Image
    புன்னகை மனம் மகிழும் தருவாயில் அகம் மலர்ந்து அவதரிக்கும் அதரம் சிந்திய முத்து புன்னகை! அழுது பிறந்த உயிர்கள் மகிழ படைத்தவன் தந்த பரிசு,பல் வரிசை தெரிய விரியும் புன்னகை! அரும்பின் கனவில் ஆனந்தம் மறை பொருளாய் நின்ற மாயன் தந்ததோ பச்சிளம் புன்னகை! சுற்றம் பழகி சொந்தம் பழகி வேடிக்கை விளையாடி விளைந்ததோ செல்லக் குழந்தை குதூகலப் புன்னகை! தானே ஆடித் திரிந்து ஓடி மகிழ்ந்து தோழியர் சூழ ஆனந்த ஆட்டம் இயல்பாய் வந்ததோ பதின்மப் புன்னகை! கண்ணாளன் காண காணாது மறைந்து காணாத பொழுது கண்டு நெகிழ்ந்து கனிந்து வந்ததோ கன்னிப் புன்னகை! மணம் புரிந்து கலவித் திரிந்து அகநானூறும் பயின்று நாணி நயமாய் விரிந்ததோ நங்கையர் புன்னகை! தாய்மை சுமந்து தளர்ந்து அமர்ந்து தானே பிளந்து வலித்துப் பெற்று பிள்ளை முகம் காணுமோ தாய்மையின் புன்னகை! இல்லறம் நடத்தும் நல்லறத் துணை அவள் இன்பம் துன்பம் யாவும் கண்டு என்றும் மாறாததோ தைரியப் புன்னகை! தளர்ந்த வயதில் தள்ளாது நின்றாலும் கைதலம் பற்றியவர் தோள் கொடுத்து துணையாக வந்ததோ அனுபவப் புன்னகை! கைலாயம் நோக்கி காத தூரம் பறந்த போதும் உயிர் தாங்கிய மேனியில் உறைய விட்டு மாறாது நின்றதோ...

நவரசம்

Image
  நவரச ம் 1.கோபம்  எனதும்,உனதும், உலகிதும் ஆன இயலாமையின் இயல்பான வெளிப்பாடு  எதையோ மாற்றத்துடித்து  இயலாது  வந்த துடிப்பின் வெடிப்பு  ஏதேனும் செய்வோமோ எனும்  எண்ணத்தின் பிரதிபலிப்பு  எதையோ செய்துவிட்டு பின்  அணுவணுவாய் அதன் தவிப்பு  உடல் நடுங்கும் சிலவேளை  ஓங்கி ஒலிக்கும் குரல்வலை  கண்கள் சிவக்கும் பளபளப்பில்  காய்ந்து வடியும் கண்ணீரும்  நெஞ்சம் கொதித்து தகிக்கும்  அடிவயிறும் அலறும்  நரம்புகளின் புடைப்பும்  வார்த்தைகளின் தடிப்பும்  கண்களின் எரிப்பும்  நிற்கட்டும் ஓர்கணம்  குணத்தோடு உரையாடி  கோபத்தை ஜெயித்திடுவோம்  ************************************************************** 2.அச்சம்  அச்சம் இல்லை அச்சம் இல்லை  எனப் பாட நான் ஒன்றும்  முண்டாசுக் கவி பாரதி இல்லை  ஒன்றை பெரும் விருப்பும்  அதை தொலைப்பேனோ எனும்  அச்சம் கொண்ட பாவை தான்  ஒளி மறைத்த இருளும்  எனை ஆட்டிப் படைக்கும்  ஓராயிரம் கற்பனையாய்  வந்து வாட்டி வதைக்கும்  ஓரறிவு...

விதைப் பயணம்

Image
  விதைப் பயணம் மண் துளைத்து வெளிவந்து முளை விட்டுத் துளிர்த்து செடியாகும் முயற்சியில்  முன்னேறும் விதைப் பயணம்! இன்னும் இரண்டு இலை சேரட்டும் ,செடி என தன்னை அறிவித்துக்கொள்ள சிறிது வளர்ந்த பின்னே விதைத்தவனும் நீர் வார்த்தவனும் அறியாமல் அவன் கண் மறைத்து இலைகள்,கிளைகள் சில மொட்டுகள் பூ வென சடுதியில் வளர்ந்துவிடும்! முளை விடும் போதே பச்சையம் தயாரித்து தானே பசியார அறிந்தது பருவம் வரும் போது பக்குவமாய் காய்த்து கனிந்து மனம் பரப்பும் விதைப் பயணம் ! விண் தொடும் முயற்சி போல் விரைந்து வளர்ந்து நிற்க படர்ந்த அதன் உருவில் பசியாறியவை பல உயிர்கள் கூடு தேடியவை பல உயிர்கள் பல்லுயிர்கள் நலம் நாடும் பயனுள்ளதாய் வடிவெடுத்த விதைப் பயணம் போல் கனிந்து வீழ்ந்தும் விருட்சமாய் புணர்ஜென்மம் எடுக்கும் விதைப் போல் பயனுள்ளதாய் அமையட்டும் மனிதப் பயணம்!

ஒளி தேவை

Image
  ஒளி தேவை பச்சை வண்ணக் கொடி! மண்ணில் பிறந்தது கூரை எட்டி மணம் பரப்ப  படர பிடி வேண்டும் மரமோ மட்டையோ இரும்பு தண்டமோ இறுக்கிக் கட்ட கயிறு இது தான் வேண்டும் எனும் அடம் இல்லை! நீர் வேண்டும் அது மழை நீரோ பனி நீரோ நிலத்தடி நீரோ ஏதோ இது தான் வேண்டும் எனும் அடம் இல்லை! ஒளி வேண்டும் மின் விளக்கோ மின்மினிஒளியோ மெழுகு ஒளியோ இல்லை இது தான் வேண்டும் எனும் அடம் உண்டு! அரும்பை மலர்விக்கும் சக்தி எதில் உண்டோ புவி உருளை தினம் தினம் சுழன்று தருகிறதோ மௌன விரதம் கொண்ட கொடிகள் மணம் விட்டு பேச துடிக்கும் தலைவன் யாரோ அவன் தரும் ஒளி வேண்டும்! மங்கியதோர் ஒளியேனும் சிறு பார்வை முகம் காட்டி மேகத்தில் மறைந்தாலும் அவன் தரும் ஒளி வேண்டும்!

கோடை மழை காரணம்!

Image
கோடை மழை காரணம்! சித்திரை மாத கத்திரி வெயில் கண்டு சூட்டு நோய்களை எதிர்கொள்ள தயாராய் வறண்ட தேகத்துடன் காத்திருந்த நேரம்  அமிர்தம் போல் ஒரு கோடை மழை   காற்றழுத்த தாழ்வு நிலை காரணம் என வானிலை அறிக்கை சொல்ல, மன்மத வருடம் வந்ததால் என சோதிட அன்பர்கள் சொல்ல -இவை   எதுவும் இல்லை என்னால்தான் என்பேன் நான். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்ற கூற்றின் அடிப்படையில் என் கர்வம் காரணமா -அதுவும் இல்லை,   மல்லி ,மிளகாய் மசாலா அரைக்க வாங்கி வைத்தேன் வற்றல் வடகம் போட்டு வைக்க ஆயத்தம் செய்தேன் இதுவரை செய்யாத புது வித சோதனை கண்டு என் வீட்டாரை காக்கவென்றே வந்தது கோடை மழை!

காற்றாக நானும்

Image
  காற்றாக நானும் காற்றாக நான் இருந்தேனா!   தேகம் நுழையா இடம் காண வதனம் அடையா மேடு ஏற  கால் சுவடு இல்லா வனம் நாட!   காற்றாக நான் இருந்தேனா அலைகடல் மேல் தவழ்ந்திட மலை முகடுகளைக் கடந்திடப் பனிச் சிகரத்தில் உறைந்திட !   காற்றாக நான் இருந்தேனா ஆகாயத்தில் பரவி நிறைந்திட அம்புலியோடு விளையாடிடத் தாரகைகளுடன் கதைத்திட!   காற்றாக நான் இருந்தேனா மரங்களை ஆட்டுவித்து மகிழ வயல் வழியூடாக தவழ்ந்திட மூங்கில் துளை இசையாகிட!   காற்றாக நான் இருந்தேனா மெல்லியால் இடை சுற்றிடக் காதலன் தூதனாய் சென்றிடத் தென்றலாய் மகிழ்ந்து குலாவிட!   காற்றாக நான் இருந்தேனா புயலாய் மாறி புவி புரட்டிட மழையை வாரி வருசித்திட ஊழிக் காற்றாய் உலகழித்திட !   காற்றாய் நான் இருந்தேனா கடந்த பாதை அறிந்திடோம் கடக்கும் காலம் கடந்த பின்னே காற்றாய் நான் இருப்பேனா?

தண்ணீர்

Image
  தண்ணீர்  வெண்மேகம் உலா வந்தது கடலில் தாகம் தனித்தது தாராளமாய் நிறைந்துவிட கார்முகிலாய் மாறியது!   காற்றுடன் கலகம் செய்தது இடிமுழக்கமாய் வசை பாடி மின்னல் வெட்டும் விழி காட்டி வானம் விட்டு வெளியேறியது!   மழை என பெயர் மாற்றியது மலை மேல் தரை இறங்கியது நிலமகள் அழைப்பு அனுப்ப அருவியாய் தாவிக் குதித்தது!   நதியாய் ஓடி விளையாடியது வேண்டி அழைத்தவர் விருப்பம் கிணறு குளம் ஏரி ஓடை உற்று என அவதாரம் கொண்டது !   எஞ்சிய சிறு மேனி கொண்டு தலைவனுடன் சங்கமித்தது தன் அடையாளம் தொலைத்து மீண்டும் தலைவன் பெயரால் கடல் என பெயர்க் கொண்டது

அந்தாதி நாள்!

Image
அந்தாதி நாள்! அடுத்த வருடம் பிறப்பு நாளை  அந்தம் அடைந்த இந்த வருடம் , ஆதிமுதல் தொடங்கும் நாளை  அடுத்த வருடம் எனும் பெயரில்.   ஆங்கில வருடம் எண்ணிக்கை  ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் . தன்னுள் தரணி நிகழ்வைத்  தேதி வாரியாக நிறைத்தும், அகிலம் முழுதும் அறிய எளிது  இந்த ஆங்கில வருட எண்ணிக்கை எதிலும் வேண்டும் கணக்கு  எண்ணி எண்ணிக் கழியும் பொழுது , துளி துளியிலும் நிமிடம் நாழிகை  நாள் வாரம் மாதம் ஆண்டு என  இதிலும் வந்தது கணக்கு ! மனிதன் வாழ்க்கை சுழல்  சுற்றும் இந்த கணக்கில் சென்ற வருடம்  விட்டுச் செல்லும்  சில நினைவுகளைக்  கடத்திச் செல்லும்  சில மனிதர்களைப்  பிரித்துச் செல்லும்  சில உறவுகளைப்  பதித்துச் செல்லும்  சில பதிவுகளைப்  பறித்துச் செல்லும்  சில பற்றுகளைக் கொண்டு சேர்க்கும்  சில கருத்துகளை  சில எதிர்பார்ப்பை சில நம்பிக்கைகளை  வாழும் சக்தியை  வாழ்வு பிடிப்பை  வாழ்க்கை பாதையைத்  தெளிவு சிந்தையை அந்தம் ஆனது ஓர் ஆண்டு 1 ஆதி முதல் தொடர்ந்தது ... மனிதன் கணக்கில் மீண்டும...

எல்லாம் புதியவை

Image
   எல்லாம் புதியவை!  அன்று மலரும்  அத்துணையும்  புதிது  காலை  புலரும் பொழுது  சூரியன் உதிக்கும் விடியல்  பறவைகள் கலவை ஒலி  மொட்டிலிருந்து விரியும் மலர் மிதமாய் விழுந்த பனித்துளி  நாசி நுகரும் காபி மணம்  பொங்கி வழிந்த சாதம்  கொதித்து அடங்கும் குழம்பு  உண்டு மகிழ்ந்த ருசி  பாதம் சுட்ட சூடு  தலையைத்  தகித்த வெயில்  வீதி வலம் வரும் பசுவின் குரல்  அந்தியில் மலர்ந்த மல்லிகை  புவியிலிருந்து புறப்பட்ட நீர்  தழுவிச் சென்ற தென்றல்  முதல் முறைக் கேட்ட பாடல்  கண்ணில் விரிந்த காட்சிகள்  உருத்து விழித்த  கோபப்பார்வை   சட்டெனத்  தணிந்த கனிவு  மொட்டென மலர்ந்த பாசம்  அதில்  தேனின்  இனிய நேசம்  உமிழ் நீர் சுரந்த தாகம்  அமிழ்தாய் அதை அணைத்த தண்ணீர்  இதுவரைக் காணா  நின்  முகம்  இதுவரை க்  கேளா உன் சொல்  அதிர்ச்சி தந்த க ன ங்கள்    மகிழ்ச்சி தரும் மணிகள்   உடல் தரும் உபாதைகள்  மருந்தாய்...

கோபாலா நீ வாராய்!

Image
   கோபாலா நீ வாராய்! பிருந்தாவனமும் நந்தகுமாரனும் இல்லை  ஆதரவு தந்து மகிழ்ந்த  ஆயர்குலமும் இல்லை  ஆறு குளம் எரியும் பசும் புல்லும் இல்லை  பால் தரும் பசுக்கள் பதறுகின்றன  கோபாலா நீ வாராய்! காய்ந்த புல்லும்  வைக்கோலும் கிட்டுமோ  தன்  வயிறு நிரப்பி மடி நிறைத்துப்  பிறந்த கன்றுக்குப் பால் புகட்ட -எனும்  ஏக்கத்தில் பசுக்கள் மறிகின்றன  கோபாலா நீ வாராய்! வெண்மைப் புரட்சியென விதவிதமாய்  வெள்ளைத் திரவங்கள் செயற்கைப் பைகளில்  அடைத்து வர அரிதாகிப் போகுமோ  வெள்ளை,கறுப்பு பழுப்புப்  பசுக்கள்  கோபாலா நீ வாராய்! காய்ந்த புல்லுக்கும் கடும் பஞ்சம்  காகிதமும் செயற்கை இலைகளும்  ஆகாரமாய் காளைகள் உண்டால்  குடல் கிழியுமோ மலடாகுமோ  கோபாலா நீ வாராய்! பால் சுரக்கும் மடி வறண்டால் வேண்டாத  சுமையென மலையாளக் கரை ஒதுக்கிக்  காவு தந்துவிடுகிறான் பாவி மகன்  நீ ஆதரித்த இனம் அழிந்துவிடாமல்  கோபாலா நீ வாராய்! குடிமக்கள் குறை தீர்க்க வேண்டாம்  "கோ" இனம் காத்திட வா கோபாலா  உன் வருகைக்க...

அம்மா தாயி!

Image
  அம்மா தாயி! வண்ணம் கொண்டு வளைய வரும் வாழ்வில் நிறமற்ற அல்லது மங்கிய நிறம் கொண்ட சில பாத்திரங்கள் மனதில் பதியும், அதில் ஒன்றே அம்மா தாயி! இது தினமும் என் வீடு தேடிவந்த வினோதமான உறவு. அழுக்கு புடவை, கலைந்த முடி, சோகமுகம்,சோம்பல் தேகம்! ஆறடி தூரம் வரும் போதே குடலை புரட்டும் வாடை கையில் தூக்கு போணி இது தான் அம்மதாயீ! தாயாக மாறும் முன்னே என்னைத் தாயாக அழைத்தது, பதின் பருவ சமையலையும் பாராட்டியது. மிஞ்சிய சோறும் குழம்பும் அமிர்தம் அதற்கு! தினமும் வீடு தேடி வரும் விருந்தினர் ஆனது சில நாள் பழக்கத்தில் வாடிக்கையானது, மிச்சம் வரும் வெஞ்சனம் சுடவைத்துப் பக்குவமாய் பல நாள் அதன் வரவை காத்து நான் நின்றதுண்டு! அம்மா தாயி என்று அதன் குரல் கேட்டு உன் மகள் வந்தது என்று-என் கணவர் எனை கேலி செய்யும் உறவானது. காலங்கள் கடந்து மனக்கண்ணில் நிற்கும் ஏழு வருட உறவு அம்மா தாயி!

பிச்சி மகள்

Image
  பிச்சி மகள்   அவளைப் பார்த்தது பல வருடங்கள் முன்பு பதிந்தது அந்த உருவம் பசைபோல் மனதில் வீதியில் வலம் வரும் அநாதை -அபலை அவள் மானம் காத்துக் கொள்ளவும் மதியில்லா மங்கை ! கிழிந்த ஆடையில் மகிழ்ந்து திரியும் நங்கை சுற்றித் திரியும் விழிகளில் - திக்கற்ற பார்வை பசிக்கு உணவுப் பாதையிலிருந்தாலும் போதும் படுத்து உறங்கக் கோவில் மரத்தின் மேடை! வினைப் பயனாய் வீணே சிரித்து விருந்தானாள் பேதை ஒருநாளில் ஓராயிரம் முறை பூனை நடை பயில்வாள் அந்நகர் வீதிகளை நடையாய் நடந்து அளந்து சலிப்பாள் அப்பகுதி மக்களுக்கு அவளும் ஓர் அசையும் அடையாளம் ! தினமும் திரிவதால் மிச்சம் சொச்சம் போட்டு காட்சிப் பொருளாய் கண்டு கதை பேசும் பொருளாய் ஒரு சீவன் உண்டு என்ற வரையில் பரிட்சயம் மாதங்கள் உருண்டோட அவளிடம் ஒரு மாற்றம் ! பிறை நிலவாய் வளர்ந்தது அவள் வயிறு -மேடிட்டு அப்பகுதி அம்மணிகளின் மனம் அதிர்ச்சியுற்றது! பிச்சியையும் விட்டுவைக்கா பேதைமை உலகம் தன் காம இச்சைக்குக் கெட்டழியும் கயவர் உலகம் ! தன் மதி அறியாதவளைத் தாயாக்கிய பாதகர் நிறை அயோக்கிய ஆடவர் உலகம் அடுக்குமோ இது ! அப்பனே அவனவனுக்குத் தக்க தண்...

பனங்கொட்டை சாமியார்.

Image
பனங்கொட்டை சாமியார். என்னை ஆட்டி படைத்த அதிசய சாமியார். பழுப்பு வண்ணம் கொண்ட பரட்டை சாமியார். முன் அறையிலிருந்து முறைத்த சாமியார் முறுக்கு மீசை கொண்ட முரட்டுச் சாமியார். சண்டித்தனம் செய்த எனை சரிகட்ட என் அன்னைக்கு உதவிய அருமை சாமியார், விட்டுக் கொடுக்க மறுக்கும் என்னை உடன் பிறப்புகளுக்காய் விரட்டிய சாமியார், இவர் பெயர் சொன்னால் போதும் பின்னங்கால் பிடரியில் பட காத தூரம் ஓடுவேன் யான். வீட்டுக்குள் புகாமலேயே வேறு புகலிடம் தேடி அலைவேன் யான். அப்படி சக்தி படைத்த சாமியார் யார்? சப்பி போட்ட பனம்பழத்தில் முளைத்தவர் அவர். தலை விரி கோலமாய் இருந்தவர் அவர். கைவினைஞன் கை பட்டு அவதரித்தவர் அவர். மிளகு போன்ற கண்கள் கொண்டவர் வில் போன்ற புருவம் கொண்டவர் கோபம் கொண்ட மீசை கொண்டவர் மிளகாய் பல அதரம் கொண்டவர். சிங்கம் போல் பிடரி முடி முகம் கொண்டு, சிறிதே முறைத்த வண்ணம் நிலைப்படி மேலே ஆணியில் தொங்கும் திருஷ்டி பொம்மை எங்கள் பனங்கொட்டை சாமியார். வளர்ந்து வரும் செயற்கை உலகில் அவதரித்த ஆயிரம் கலவைகளால் இவ்விடம் விட்டு மறைந்த மாய சாமியார், செயற்கை மறைத்த இயற்கை சாமியார். பயம் விட்டு பாசமுடன் அழைத...

கண்ணா மூச்சிஆட்டம்

Image
கண்ணா மூச்சிஆட்டம் மறைந்து நின்றான் அண்ணன் தேடித் திரிந்தது தங்கை தேடிப் பார்த்து முடியவில்லை தேடுதல் ஆட்டம் விடுத்து வண்ணங்கள் கொண்டு வரையச் சென்ற தங்கை சாமர்த்தியமாய் மறைந்து வியர்வையில் குளித்தான் அலமாரி அடுக்கில் அவன் அறைக்குச் சென்ற அம்மாவிடம் ரகசிய விசாரணை அண்ணன், தங்கை எங்கே என்றே? பாப்பா வண்ணம் தீட்டுதே அம்மா சொல்ல அவசரமாய் இறங்கி தன் கோபம் இறக்கத் தங்கையைத் தேடி ஓட்டமாய் அடிக்க ஓடினான் அண்ணன்! கண்ணா மூச்சிஆட்டம்!

குதிரை என்னம்மா செய்யும்.

Image
  1.  குதிரை என்னம்மா செய்யும். ஆரம்பப் பள்ளி இளந்தளிர் பருவம். தமிழ்,கணிதம் புத்தகம் மட்டுமே கண்டதுண்டு, ஏ,பீ ,சீ,டி என்பதே ஆங்கிலம் என்போம், அறிவியல்,வரலாறு பாடங்கள் அறியோம், ஒரு கோடு போட்ட நோட்டு இரண்டு, நாலு கோடு போட்ட ஆங்கில நோட்டு ஒன்று, சிவப்புக் கோடு மார்ஜின் கணக்கு நோட்டு. இதுவே அதிகம் எங்கள் ஆரம்பப் பள்ளிக்கு, வீட்டுப் பாடம் எழுத நோட்டுகள் கிடையாது, வண்ண வண்ண நெகிழி சட்டை போட்ட சிலேட்டுகள் உண்டு வெவேறு அளவில். அதில் எழுத வென்றே உருண்டை மாவு குச்சி, பட்டையாய் எழுதக் கட்டை குச்சி வேகமாய் எழுதும் கட கட குச்சி. ஆசிரியை கரும்பலகையில் எழுதும் போதே மனனம் செய்து ,நகலும் எடுப்போம் நோட்டில், என் கையெழுத்து காந்திஜிக்கே சவால் விடும், என் நோட்டின் துணையும், என் சொல்லின் துணையுடன் , அம்மா நகலெடுப்பார் அண்ணன் ,அக்காள் சிலேட்டில் வீட்டுப்பாடம் அழிக்கவென்றே தம்பி,தங்கை தவழ்ந்து வரும், அதில் பிழைத்து அழியாமல் ஆசிரியை கையில் சேர்ப்பிக்கும் வரை கண்ணும் கருத்துமாய்க் காக்க வேண்டும். ஒரு நாள் மாய்ந்து,மாய்ந்து நான் எழுதியதை மறைத்து வைக்க மறந்து போகத் தவழ்ந்துவந்த என் இளவல்...