Posts

Showing posts from 2022

ங ப்போல் வளை

Image
  ங ப்போல் வளை.  புது வருடம் பிறந்து விட்டது. எப்போதும் பனியில் நனைந்தபடி பிறக்கும் வருடம், இந்த வருடம், அடாத மழையின் தொடர்ச்சியாக வந்த மூன்று நாள் மழையில் குளித்தபடி பிறந்தது. " ஆத்தாடியாத்தி, எந்த வருசமும் இப்படி மழையைப் பார்த்ததில்லையடி ஆத்தா. கார்த்திகை கழிஞ்சாலே, கடும் மழை இல்லையிம்பாக, இப்ப என்னடான்னா, மார்கழி பிறந்தும்ல மழை கொட்டுது" என இயற்கையை வியந்தபடி பூவாத்தா வாசலை எட்டிப் பார்க்க, அவரது மூத்த பேரன் மனைவிகள் இருவரும், மெனக்கெட்டு ஒரு மணி நேரமாகப் புள்ளி வைத்துப் போட்டிருந்த பூக்கள் நிறைந்த வண்ணக் கோலம், கரைந்து தூரிகையால் ஆங்காங்கே துடைத்து விட்ட மாடர்ன் ஆர்ட் போல் வண்ணக் கலவைகள் தங்களுக்குள் கை கலந்து உரு மாறி நின்றன. கையில் காப்பிக் கோப்பையோடு, உருமாறிய கோலத்தையே , வராண்டா வழியே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பூவாத்தாவின் கடைசிப் பேரன் மனைவி வைசாலி. " இது என்னடி அதிசயமா, அசலூர்காரி இங்கனை உட்கார்ந்திருக்கா" என அடுத்த அதிசயமாய்ப் பார்த்தார் பூவாத்தா. அவர் குரல் கேட்டும் கண்கள், கரைந்த கோலத்தின் வண்ணத்தில் உரைந்திருக்க, மனதில் பல்வேறு எண்ணங்களை ஓட்டி

சிந்தா - ஜீவநதியவள் - முதல் பரிசு.

Image
 சிந்தா - ஜீவநதியவள் - முதல் பரிசு.  சகாப்தம் , வலைதளத்தில், வண்ணங்கள் தொடர் நாவல் எழுதும் போட்டியில் ,  பச்சை வண்ணத்தில் , கிராமியம் சார்ந்த பிரிவில் சிந்தா- ஜீவநதியவள் கதை எழுதப் பட்டது. 23 கதைகள் வரை போட்டிக்கு பதியப்பட்டு, ஏழு கதைகளே முழுமையாக முடிக்கப் பட்டது. அதில் அதிகமான வாசகர்களால் வாசிக்கப் பட்டு, நடுவர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.   முதலிடமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப் பட்டு  உள்ளது.  vannankal potti mudivu. கதை திரி ; sinthaa

நீயே எந்தன் மகளாய் (பதிப்பு புத்தகம்)

நீயே எந்தன் மகளாய்.    எனது ,முதல் நேரடி பதிப்பு புத்தகம்.நீயே எந்தன் மகளாய்...  வைகை பதிப்பகத்தின் மூலம் ஜனவரி 1, 2022 ஆம் தேதி வெளியிடப் பட்டது. நாயகன்; அன்புச் செல்வன்.  நாயகி; கயல்விழி .  ஜல்லிக்கட்டு, மாடு எனத் திரியும் மண்ணின் மைந்தனான ஒரு  மாடுபிடி வீரனின் கதை. இந்த புத்தகத்தை கீழ்  எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கலாம். இதனை வைகை பதிப்பகம்;  9486802859 Priya nilaiyam - +91 94444 62284 wecan shopping - 044 - 4286 7570 wecanshopping@gmail.com

எண்ணங்களின் எழுத்துக் கோர்வை

  எண்ணங்களின் எழுத்துக் கோர்வை என் சிந்தையில் தோன்றிய எண்ணங்களை கவி நடையில் புனைந்து, எழுத்துக் கோர்வைகளாக தொகுத்து உள்ளேன். இவை நெடுங்காலமாக எழுதியவை, கவிதைகள் என்று கூட சொல்ல முடியாது, "ஏதோ கொஞ்சம் வசன நடையா எழுதுறேன், இருந்தாலும் கவிதாயினினு ஒத்துக் கொள்ளுங்கள் " என்ற வேண்டுகோளோடு பதிவேற்றுகிறேன். எழுத்துக் கோர்வை திரிகள். எழுத்துக் கோர்வை -1 எழுத்துக் கோர்வை- 2 எழுத்துக் கோர்வை- 3 எழுத்துக் கோர்வை- 4 எழுத்துக் கோர்வை- 5

ஹாசினி சந்திரா

Image
ஹாசினி சந்திரா   சகாப்தம் வலைதளத்தில், வண்ணங்கள் ... தொடர் நாவல் போட்டி 2021- ஹாசினி சந்திரா.  இதில் சாம்பல் வண்ணத்தில், ஆன்டி ஹீரோ சப்ஜக்ட்- ஓர் புதிய கோணம் .  hasini chandra link. நாயகி; மதுர ஹாசினி சந்திரா  நாயகன் : சந்திரதேவ்  நாயகியின் அடையாளத்தையே  அழித்து அவளை காக்கும் நாயகன். ஹாசினி சந்திரா.   பாம்ப் ப்ளாஸ்ட், படுகொலை, கடத்தல், தீவு, விசாரணை, அரசியல், அதிகாரம், காதல் என ஃபுல் பேக் மூவி... Read & enjoy.  தனது காரியத்தை சாதிக்க , சட்ட திட்டங்களை தகர்க்கும் நாயகன். தந்தைக்காக அரசியலுக்கு வந்து தன்னையே இழக்கும் நாயகி. குடும்பம், அரசியல், கடத்தல், விசாரணை என பரபரப்பான கதை களம்.   விமர்சனங்கள். விமர்சகர் ; ரெனி ஏஞ்செலின் ராஜ் . தீபா செண்பகம் எழுதிய ஹாசினி சந்த்ரா கதை படித்தேன். மிக அழகாக விரிவான அதிக எண்ணிக்கையில் கதை மாந்தர்கள் வைத்து நெளிவு சுழிவுகளோடு கதை எழுதும் திறமையான ஆசிரியர். எனவே அதிகஎதிர்பார்ப்புகளோடு கதைமுடிய காத்திருந்து வாசித்தேன். ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தது கதை. தீபாவா கொக்கா என நினைக்க வைத்தது ஆரம்பம். போகப்போக லாஜிக் இல்லா மேஜிக் ஆய்டுச்சு. காந்தர்வம் னு ஒரு Scene

சிந்தா- ஜீவநதியவள்

Image
 சிந்தா- ஜீவநதியவள் நாயகி; சிந்தாமணி,  நாயகன் ; சிங்காரவேலு.  சகாப்தம் வலை தளத்தில் , வண்ணங்கள் போட்டிக்கு, பச்சை வண்ணம் கிராமிய கதைகளுக்கான பிரிவில் எழுதியது.  லிங்க்;  சிந்தா- ஜீவநதியவள் -link. தமிழ் நாட்டில் ,சிவகங்கை, ராமநாதபுரம்   மாவட்டங்களைக்  கிழக்கு சீமை என அழைப்பர்.  மேற்குத்  தொடர்ச்சி மலைகளில், பல்வேறு சிறு ஆறுகளாக உருவாகி, தேனீ மாவட்டத்தில்  ஒன்றாகி வைகை  என பெயர்  பெற்று, வைகை நதி மதுரை மாவட்டத்தில் பாய்கிறது. இது, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள்  வழியாகப்  பயணித்து, விளைநிலங்களை செழிப்படைய வைத்து,  நேரடியாகக்  கடலில் கலக்காமல் ராமநாதபுரம்  பெரிய ஏரியில் முடிவடையும்.  வைகையில் அணைக் கட்டப் பட்ட பிறகு, நீர் அங்கே சிறைப்பட, இங்கே கிழக்குச் சீமை வானம் பார்த்த பூமியானது . மழை  பொழிந்தால் தான், வைகையிலும் நீர், என்ற நிலை உருவானது. இது கிழக்குச் சீமை மக்களின் விவசாயத்தையும் , வாழ்வியலையும்  பாதித்தது.  சீமை  கருவேலமரம்  எங்கும் நிறைந்தது . வாழ்வாதாரமும் மாறியது. சிந்தா- ஜீவநதியவள் ,வானம் பார்த்த பூமியான அந்த மக்களின்  வாழ்வியலை மையமாக  வைத்துப்  புனையப்பட்ட கதை.  கிழக்குச் சீ