ஹாசினி சந்திரா
ஹாசினி சந்திரா
சகாப்தம் வலைதளத்தில், வண்ணங்கள் ... தொடர் நாவல் போட்டி 2021- ஹாசினி சந்திரா.
இதில் சாம்பல் வண்ணத்தில், ஆன்டி ஹீரோ சப்ஜக்ட்- ஓர் புதிய கோணம் .
hasini chandra link.
நாயகி; மதுர ஹாசினி சந்திரா
நாயகன் : சந்திரதேவ்
நாயகியின் அடையாளத்தையே அழித்து அவளை காக்கும் நாயகன். ஹாசினி சந்திரா. பாம்ப் ப்ளாஸ்ட், படுகொலை, கடத்தல், தீவு, விசாரணை, அரசியல், அதிகாரம், காதல் என ஃபுல் பேக் மூவி... Read & enjoy.
தனது காரியத்தை சாதிக்க , சட்ட திட்டங்களை தகர்க்கும் நாயகன்.
தந்தைக்காக அரசியலுக்கு வந்து தன்னையே இழக்கும் நாயகி.
குடும்பம், அரசியல், கடத்தல், விசாரணை என பரபரப்பான கதை களம்.
விமர்சனங்கள்.
விமர்சகர் ; ரெனி ஏஞ்செலின் ராஜ் .
தீபா செண்பகம் எழுதிய ஹாசினி சந்த்ரா கதை படித்தேன்.
மிக அழகாக விரிவான அதிக எண்ணிக்கையில் கதை மாந்தர்கள் வைத்து நெளிவு சுழிவுகளோடு கதை எழுதும் திறமையான ஆசிரியர்.
எனவே அதிகஎதிர்பார்ப்புகளோடு கதைமுடிய காத்திருந்து வாசித்தேன்.
ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தது கதை.
தீபாவா கொக்கா என நினைக்க வைத்தது ஆரம்பம்.
போகப்போக லாஜிக் இல்லா மேஜிக் ஆய்டுச்சு.
காந்தர்வம் னு ஒரு Scene. என்னதான் விளக்கம்கொடுத்தாலும் ஒரு திறமையான எழுத்தாளரிடம் நான் ஏமாந்த Feel.
அப்புறம் ஒரே லவ்ஸ். தீபா ரொமான்ஸ் நிறையவே வைப்பாங்க.அழகா இருக்கும்.இதுல ரொமான்ஸ் சின்னபிள்ளைங்க எழுதுர கதைல வரமாதிரி எனக்கு feel ஆச்சு.
முக்கியமான பாய்ன்ட். நம்ம சூப்பர் ஹீரோ தமிழன் தங்கபாண்டி IPS நேர்மை தவறிட்டார்.நேர்மையான IAS தான்வி யும் துணை போய்ட்டாங்க.(தங்கபாண்டியனையும் தான்வியையும் பார்த்து இவர்கள் பாணியில் ஒரு கதை வலம் வருகிறது. உங்களுக்குத்தெரியுமா தீபா)
மற்றபடி கதை பக்கா.
Planning பக்கா.
அரசியலில் வாரீசுகள் வரும் நிலை சொல்லியவிதம் பக்கா.
இது பழைய பஞ்சாங்கம். வேற என்ன சொல்லப்போகிறது னு நினைக்கிறீங்களா. என்னவோ சொல்லணும்னு தோணிச்சு சொல்லிட்டேன்.
இப்படிக்கு
தங்களின் எழுத்திலும் கதையிலும் மதியங்கிய வாசகி.
********************************************************************
விமர்சகர்; சித்ரா சரஸ்வதி
தீபா செண்பகத்தின் ஹாசினி சந்திரா எனது பார்வையில். ஹாசினி சந்திரா தனது தந்தையின் அரசியல் கட்சிக்காக அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாரிசாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறாள். அரசியலில் இருந்த ஹாசினி சந்திர தேவால் காதல் சுஹாசினியாக மாறுகிறாள். கர்நாடக அரசியல் களமாக அரசியல், துரோகம், சூழ்ச்சி கொண்ட அரசியல் கதையாக தொடங்கி காதல் கதையாக நிறைவடைகிறது. தீபா செண்பகத்தின் தொய்வில்லா விறுவிறுப்பான காட்சிகளுடன் கதை நகர்கிறது.
*************************************************************************************
விமர்சகர்; அலமு கிரி
கதை: ஹாசினி சந்திரா
ஆசிரியர்: தீபா செண்பகம்
சஸ்பென்ஸ் ரொமான்ஸ் பாசம் னு எல்லாம் கலந்த ஒரு திரைப்படம் பார்த்த மாதிரி இருந்தது கதை....
திரைப்பட நடிகர் தேர்ந்த அரசியல்வாதியின் மகளாக நாயகி ஹாசினி... ஹாசினிக்காக உலகையே எதிர்த்து நின்று காதலை காட்டும் ஹாசினியின் மாமன் மகன் சந்திரா...
நினைவுகள் சிதறிப் போய் இருக்கும் தந்தையின் பெயர் கெட்டு சீரழியாமல் இருக்க நிற்பந்நத்தின் பேரில் அரசியலில் கலமிறங்கும் ஹாசினியை ஆபத்தில் இருந்து காப்பாற்றி சுத்தமாக அவளின் அடையாளத்தை அழித்து காக்கிறான் சந்து ....
ராம்ஜீ பானுமதி மேனகா இவர்களின் முக்கோண உறவுகளை மிக மிக நேர்த்தியாக கொடுத்து இருக்காங்க....
தங்கப் பாண்டியன் ஹாசினி கேஸ் விசாரணை செய்வது ரொம்பவே விறுவிறுப்பாக இருந்தது..... ( தங்கப்பாண்டியன் தான்வி வேற கதையா இருக்கா? )
ஹாசினி புது அடையாளத்தை ஏற்கிறாளா? இல்லை பழைய ஹாசினியாக இருக்கிறாள? அதனால் ஹாசினி சந்து விற்க்கும் ஏற்படும் விளைவுகளை என்ன என்பதை கதையை படிச்சி தெரிந்து கொள்ளுங்கள்...
வாழ்த்துக்கள்
Deeba senbagam சிஸ்டர் **********************************************************************************
விமர்சகர்; செல்வராணி
தீபா செண்பகத்தின் ஹாஸினி சந்திரா.
அரசியல் கதை போலிருக்குன்னு நினைச்சேன்.அரசியல்,கொலை,கடத்தல்ன்னு கதை பல கிளைகளுடன் பய்ணித்து செல்கிறது.
மறதி நோயில் அவதிப்படுபவரை வைத்து அரசியல் செய்யும் கூட்டம்.அப்பாவுக்காக தன்னை மாற்றிக்கொண்டு அரசியலில் இறங்குபவளை மணக்க துடிப்பவனையும்,அம்மா அப்பாவின் பாசத்தையும் சுமக்கும் ஹாஸினி.
இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்தாலும் மகள் மீது உயிராய் இருக்கும் சந்திரா.அவர் தங்கை அனுசூயாவின் வெறுப்பில் ஒதுங்கும் ஹாஸினியை அவர்மகன் தன் காதலால் நெருங்குகிறான்.கடத்தல்,அடையாளத்தை மறைத்தல் என அவன் செய்யும் அதிரடிகள்!
அந்த தீவும் அங்கு வரும் தங்கபாண்டியனும்,தொடரும் கண்ணாமூச்சி ஆட்டங்களும் நல்லா இருக்கு.
*******************************************************************
Comments
Post a Comment