மனச தாடி என் மணிக்குயிலே
மனச தாடி என் மணிக்குயிலே
கதையின் திரி - அமேசான் link
கதை பற்றி....
நாயகன் ; செல்வமணி
நாயகி; பூங்குயில்
மனச தாடி என் மணிக்குயிலே ! இந்த தலைப்பே செல்வமணி ,பூங்குயில் கதாபாத்திரங்களுக்காக உருவாக்கப் பட்டது தான்.
மறுமணம் -என்பதை கதை கருவாக கொண்டு புனைய பட்ட கதை. இதிலிருந்து கிடைத்த அட்சயபாத்திரம் தான் பாண்டிக் குடும்பம்.
பாண்டிக் குடும்பம் - இந்த திரியில் நீங்கள் மொத்த பாண்டிக்கு குடும்பத்தையும் காணலாம்.
மணிக்குயில் , எனது மூன்றாவது படைப்பாக இருந்தாலும், என்னை வாசகர்கள் மத்தியில் அழைத்துச் சென்றது இந்த கதை. எனக்கான தனி அடையாளத்துக்கு நங்கூரமிட்டதும் இந்த கதை தான்.
தென்கிழக்கு சீமையின் இயல்பான சொல்லாடல்கள், பேச்சு வழக்கு, அந்த மக்களின் வாழ்க்கை முறை , கூட்டுக் குடும்பம் ,ஆகியன இதன் சிறப்புகள்.
மணிக்குயில் -காணொளி
மனச தாடி மணிக்குயிலே- விமர்சனம் - தொகுப்பு.
1.விமர்சகர்: அலமு பழநியப்பன்.
தீபா செண்பகம் அவர்களின் "மனச தாடி என் மணிக்குயிலே" மனதை , ஆரம்பித்த மூன்று அத்தியாயங்களிலேயே கொடுத்தாச்சு பா. தூங்கா நகரத்தை களமாகக் கொண்டு அந்தச் சுற்றுப்பகுதியைச் சார்ந்த மக்களை கதை மாந்தர்களாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்து கதை. சற்று பெரிய கதை தான் ... ஆனால் சலிப்படையச்செய்யவில்லை என்பது நிச்சயம். நான் இன்னும் முடிக்கவில்லை. ஆனால் மண்மணம் மாறாத ஒரு கதை வாசிக்கனும்னு நினைக்கிறவங்க ஆரம் பிங்க. லிங்க் இந்த மாத இறுதிவரை மட்டுமே இருக்கும் னு எழுத்தாளர் சொல்லியிருந்தாங்க.
ஒவ்வொரு மனிதரையும் (கதாபாத்திரத்தையும் ) அவர்களின் உணர்வுகளையும் உணர முடிகிறது. அது உங்க வெற்றி மா..ஆரம்பத்தில் பெயர்க்குழப்பங்கள் இருந்த போதும் கதையின் போக்கில ஒவ்வொருவரும் என் வீட்டில் ஒருவராகிவிட்டனர்.
இரண்டு வயது நிறையாத குழந்தையுடன் தனித்து இருக்கும் நாயகி பூங்குயில்......ஏன்? மூன்று வருடங்கள் கடந்த பின்னும் எட்டிப்பார்க்காத குழந்தையின் தந்தை (ஆம் குழந்தையின் தந்தை மட்டுமே ) அப்படி என்ன செய்தான்? அவனை அவளோடு வாழ வைக்க மாசி களரியில் ( சிவராத்திரி வழிபாடு ) பேச முடிவெடுக்கும் குடும்பத்தினர்..... என்ன ஆனது? அந்தத் திருவிழாவை நீங்க காட்சிப்படுத்தியிருந்த விதம் அப்படியே எங்களை அங்கு கொண்டு சென்றது.
கிராமத்து மனிதர்கள் என்ற போதும் அடிப்படையாக சில நம்பிக்கைகள் இருந்தாலும் அவங்க காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் அந்த பண்பு ... "மனிதம்" இன்னும் இருக்கு என்ற நம்பிக்கையைத்தருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் பார்க்கும் மனிதர்களே என்பதில் இன்னும் நாம் கதையோடு ஒன்றிவிடுகிறோம். அந்த எலிக்கதை......கடவுளே.....என் வீட்டில் அடிக்கடி என்னைக்கேலி செய்ய என் மகளும் அவள் அப்பாவும் கையாளும் கதை (இப்பவும் என் காதில் ஒலிக்கிறது என் மகளின் வார்த்தை" இவ்வளவு பேசும் அம்மா , ஒரு எலியைப்பார்த்தா.... 🤣🤣🤣 என்ன செய்வா னு நமக்குத்தான் பா தெரியும் " , என் பதில் "பாம்புக்கு கூட பயப்பட மாட்டேன் .....என்ன செய்வது எலியைப்பார்த்தா பயமா இருக்ககே " )
கதை பற்றி நான் அதிகம் சொல்லவில்லை. வாசிப்பவர்கள் நிச்சயம் கதைக்குள் சென்று விடுவார்கள் என்பதில் எனக்கு நமபிக்கையிருக்கிறது.
வாழ்த்துகள் தீபா செண்பகம்.
*†***************************************************************
2. விமர்சகர்: ஹேமா போஸ்.
யம்மா தெய்வமே!! மனசதாடி என் மணிகுயிலே எழுதுனது யாரு மா.... சூப்பர் இது தான் உங்க முதல் கதையா.. எங்க ஊர் ஒரு நிமிஷம் அப்படியே கண்முன் கொண்டு வந்திட்டீங்க...
இங்க சாதாரணமா பேசுறதே
ஏலேய் என்ன லந்த கூட்றீய நீயி
இப்படி தான் இருக்கும் பேச்சு வழக்கு....
பாசக்கார பயபுள்ளக மதுரைகாரைங்க அக்கப்போர் கூட்டி பஞ்சாயத்து பன்றதில்லயும் அவங்கள அடிச்சுக்க முடியாது.. வீர விளைஞ்ச மண்ணு.. இங்க ஆண்களுக்கு மட்டும் இல்லை பொண்ணுங்களும் கொஞ்சம் கெத்தா திமிரா தான் பேசுவாய்ங்க...
கருத்த பாண்டி குடும்பத்தில எத்தனை பாண்டிகள்... கடைசி வரை யாரெல்லாம் அண்ணைங்க யாரெல்லாம் சித்தப்பு பெரியப்பு னே தெரியல எனக்கு...
செல்வமணி..
பூங்குயில்...
ஆனால் இங்கே அறுத்து கட்றது புதுசில்லப்பு ஆனால் அந்த பொம்பளங்க மனசு அதை புட்டு புட்டு வச்சுட்டீங்க ஆனால் செல்வன போல மாமான் அமைறதில்லயே எல்லாருக்கும் ....
என்ன தான் பால் மேல சத்தியம் வாங்கினாலும் வார்த்தைகள விட்டு அந்த பொண்ணு மனசு படுற பாடு சொல்ல முடியாது...
இந்த கதைய படிங்க அண்ணன்களின் பாசங்கள்
அப்பத்தா அய்யா பேரன் பேத்திகளின் வாஞ்சைகள் பெரியப்பா சித்தப்பா கனிவுகள்
அதே நேரத்தில் ஆண்களின் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு அதிரடிகள் எல்லாம் சூப்பர் தான்...
உசிலம்பட்டி காரைங்க இந்த கதை படிச்சா உங்கள தூக்கினு போய்டுவாய்ங்க 😁😁😁
கதை ல நிறைய விஷயங்கள் இருக்கு படிங்க.. நான் எல்லாத்தையும் சொல்ல முடியாது ஏனென்றால் பெரிய கதை தான்...
*†*********************************************************************
3. விமர்சகர்: மதுமதி சபாபதி.
Thanvi கல்யாண வைபோகமே படிக்கலான்னு ஆரம்பிச்சா அப்புறம் தான் தெரிஞ்சுது அது இரட்டை கதைனு.மனச தாடி மணி குயிலே.author Deepa shenbagam link கொடுத்தாங்க.படிச்சு முடிச்சேன்.அப்பா டி.என்ன ஒரு அழகான கதை.ரொம்ப விறுவிறுப்பாக வட்டார வழக்கில் சும்மா அப்புடி இருக்கு.சாதி கூட்டு குடும்பம் எல்லாம் அவங்க ரத்தம்னு வரப்போ எப்பிடி புரட்சி செய்யவும் thayaraakiraanga.மாய தேவன்,செல்வம் ,செல்லம்மா கேரக்டர் மனச நிறச்சுடுது.பூவும்,சரயுவும் கூட தன்மானம் வேணும்னு காட்டராங்க.பெரிய குடும்பம்.எல்லா charactors பத்தியும் சொன்னா சுவாரசியம் போய்டும்.படிங்க. என்ஜாய்.நான் தான்வி கல்யாண வைபோகமே படிக்க போறேன்.
*******************************************************************
4. விமர்சகர். சித்ரா சரஸ்வதி.
தீபா செண்பகத்தின் மனசை தாடி என் மணிக்குயிலே கதை எனது பார்வையில். நாயகி பூங்குயில் திருமணம் செய்து கொண்ட ஒரு வாரத்தில் விட்டுச் சென்ற அத்தை மகன் மற்றும் காவல் துறையில் பணியாற்றும் கணவன் வாசு . பூங்குயில் அவளது அத்தை செய்த துரோகத்தால் தான் இரண்டாவது மனைவி என்று அறியாமலே மகளுடன் தாய் வீட்டில் வாழும் நிலை. பாண்டி குடும்பம் என்று ஒரு பெரிய குடும்பம் இருந்தும் ஏமாற்றப்படும் பூங்குயிலை உண்மை தெரிந்ததும் இன்னொரு அத்தை மகன் செல்வத்திற்கு மறுமணம் செய்து வைக்கிறார்கள். அவளை விரும்பி மணக்கும் செல்வம் அவள் தன்னை ஏற்றுக் கொள்ள வைத்தானா என்பதை சுவாரசியமாக தந்திருக்கிறார். ஒரு பெரிய கூட்டுக் குடும்பக் கதை. சுவாரசியமாகவே செல்கிறது. ஆனால் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என எனக்குத் தோன்றியது. கதை சுவாரசியமாகத்தான் செல்கிறது. செல்வம், அவனின் தாய் செல்லம்மாள் கதாபாத்திரங்கள் அருமை. பெண்களுக்கு மறுமணம் செய்து வைப்பது நன்றாக உள்ளது.
***********************************************************************
5. விமர்சகர்: சுபாஷினி சுகுமாரன்.
#myreview...
மனசை தாடி என் மணிக்குயிலே...
கதையின் தலைப்பை பார்த்து எனை ஈர்க்க படித்த கதை இது....
எழுத்தாளர் தீபா சென்பகம்...
இவங்க எழுதியதில் நான் படித்த முதல் கதை....
மறு மணம்....
ஒரு பெண்ணின் வாழ்வினை எப்படி மாற்றி அமைக்கும் என்பதை அவ்வளவு அழகாக எழுதி இருக்காங்க இந்த எழுத்தாளர்....
எந்த மேல் பூச்சில்லாத எழுத்து சூப்பர்....
மதுரை பக்கம் உள்ள ஊரில் இருக்கும் மக்களின் மனதை அழகாக படம் பிடித்து காட்டும் விதம் அருமை... ரொம்ப சென்ஸிட்டிவான கதை களத்தை எங்கேயும் திசை திருப்பாமல் அழுத்தம் அதிகம் இல்லாமல் தென்றல் வருடுவது போல் நகரும் கதை....
பல கதாபாத்திரங்கள் இருக்கும் இந்த கதையில் என் மனதை திருடிய கதாபாத்திரம் பேச்சி அம்மா, மாயன், செல்லம் தான் இவங்க மூன்று பேரும் முந்தியா தலைமுறையினர் ஆகிய போதும் வாழ்க்கை தடுமாறுகிறது என்ற நிலையில் முடிவுகளை எவ்வளவு அழகாக எடுத்து இளைய தலைமுறையினர் தவறை சரி செய்கின்றனர் என்பது தான் அழகு...
உண்மையில் கதை படிக்கும் போது இந்த கிராமத்தில் எல்லாம் நம்மை சுத்தி நடப்பது போன்ற உணர்வு அவ்வளவு அழகான எழுத்து நடை....
ஹீரோயின் வாழ்க்கை சரி பண்ண நடக்கும் பஞ்சாயத்து சீன் தான் செம மாஸ் தங்கபாண்டியன் வேற லெவல் தான்...
இரண்டாம் மணம் காரணமாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மன சிக்கலை எப்படி கடந்து வருவது என்பது அன்பு பாசம் ஒற்றுமை என பல உணர்வை கொண்டு இந்த கதை தந்திருக்காங்க....
ஹீரோ உண்மையில் சூப்பர் தான்...
இந்த மாதிரி எல்லாம் நடக்குமா என்றால் நடக்கும் இடங்கள் நிறைய இருக்கிறது....
இன்றைய காலகட்டத்தில் மெத்த படித்து புதுமையும் புரட்சி பண்ணி பெருமை பேசுபவர்களுக்கு நீங்க பெருமையாக நினைக்கும் எல்லாமே எங்க முன்னோர்கள் போற போக்கில் அசால்ட்டாக செய்துட்டு போயாச்சு அதை யாருமே கவனிக்கவில்லை என்பது தான் உண்மை.... இந்த கதையில் பல இடங்களில் அது புரியும்...
இந்த ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்.. உண்மையில் உங்கள் எழுத்து அப்படியே கட்டி போட்டு இருக்கிறது.. சூப்பர்.. ரொம்ப என்ஜாய் பண்ணி படிச்சேன் பல இடங்களில்.. அவ்வளவு அருமையாக எதார்த்தமான கதை..,
Link இதோ 👇
***********
6. விமர்சகர் : செல்வராணி.
தீபா ஷெண்பகத்தின் மனசை தாடி என் மணிக்குயிலே.
அசலான கிராமத்துக்கதை.ஆனால் பெரிய கதை!ஆன் கோயிங்கில் படித்தால் சுலபமாக இருந்திருக்கும்.சேர்த்து வைத்து படிக்க எடுத்தால் ஒரு வாரம் ஆச்சு,படிச்சு முடிக்க!
இதன் தொடர்ச்சியாய் இப்ப வரும் கதை படிக்கலாம்ன்னு பார்த்தால் அதுவும் பெரியதுதான்!நேரம் ஒதுக்கி படிக்கணும்.
நிறைய கதாபாத்திரங்கள் இருக்கும் கதை படித்தால் எப்பவும் குழம்பி போகும் ஆள் நான்!அனேகமாக இப்படி கதைகளை தவிர்த்து விடுவேன்.இந்த கதை என்னை இழுத்து விட்டுடுச்சு!
பாண்டி குடும்பமும்,செல்வம் மற்றும் பூவும்,வாசு ,சரயு,தங்கம்,தான்வி இப்படி சில பெயர்கள் தான் நினைவில் இருக்கு.அதனால் பொதுவாக சொல்லி விடுகிறேன்.மறுமணம் என்று நாம் சுலபமாக சொல்லி விடுகிறோம்.அதை நிஜ வாழ்வில் அனுபவிப்பவர்களின் மன அழுத்தம் நமக்கு இந்த கதை சொல்கிறது.பெரிய குடும்பமான பாண்டி குடும்பம் பேத்திக்கும் பேரனுக்கும் திருமணம் செய்து வைப்பாங்க.வாசுவின் அம்மா தன் பிறந்த வீட்டில் தன் உரிமை மற்றும் சீர் பெருமை இப்படி பல பேராசைகளுடன் மகனின் விருப்பமின்றி மகனை அதட்டி ஒத்துக்க வைப்பார்.அவனோ சரயுவுடன் திருமணமாகி அவள் கர்ப்பமாகவும் இருப்பாள்.அதனை சொல்லியும் சோலையம்மா மூடி மறைத்து விடுவார்.வாசு ஒரு நாள் உறவில் அவளுக்கு குழந்தையை கொடுத்துவிட்டு ஊர் பக்கம் வராமலே இருந்துவிடுவான்.
இன்னொரு முறை மாமன் செல்வம் இவளை விரும்பியிருப்பான்.வசதி வாய்ப்புகள் இல்லன்னு அவன் ஒதுங்கியிருக்க பூவுடன் தன் ஆசையை சொல்லியும் அவள் அவனை தன் கண்ணில் படாதேன்னு சொல்லிய வார்த்தையில் வெளி நாடு சென்றுவிடுவான்.இவளின் வாழ்வை அறிந்து ஊர் திரும்புகிறான்.குட்டி அழ்கி இவனை அப்பா என அழைக்கிறது!அழகு செல்லம்!அதுதான் இவர்களை இணைக்கும் பாலம் கதையில்!
தங்கம் தன் தங்கையின் வாழ்க்கையை சீர் செய்ய களம் இறங்குகிறான்.அதற்குப்பின் கதை நம்மை பாண்டி குடும்பத்துடன் இணைத்து வைக்கிறது.அந்த கிராமத்து உறவுகளின் பாசம்,கோபம்,குடும்ப விழாக்கள்,முக்கியமா அந்த மாசிக்களறி!இன்னும் இப்படி கிராமத்து மக்கள் இருப்பதால்தான் நம் பாரம்பரியம் அழியாமல் இருக்கு.கிராமத்தில் பஞ்சாயத்துகள் நடைமுறை வாழ்வை சுலபமாக்குகின்றன.அறுத்துக்கட்டுதலும் அண்ணன் இறந்தால் இளம் வயதாக அண்ணி இருந்தால் கொழுந்தன் தாலி கட்டுவதெல்லாம் நாமும் பார்த்திருக்கிறோமே!இந்தக்கதையைப்போலவே ஜாதி மாறி திருமணம் செய்தவர்களை ஒதுக்கி வைப்பது,குலதெய்வ கோவிலில் பூஜையில் சேர்க்காதது எல்லாம் நானும் பார்த்திருக்கிறேன்.இன்றைய கால ஒட்டத்தில்சில மாற்றங்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன.
ஆணவக்கொலைகள் நாமும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!
மேல் தட்டு மக்கள் மறுமணம் செய்தாலே பொதுவெளியில் வரும் அசிங்கமான கமெண்ட்டுகளை பார்க்கிறோம்.பூவும் தன் காதில் இப்படி கேட்டுக்கொண்டே இருக்கிறாள்.செல்வம் இதையெல்லாம் தவிடுபொடியாக்கி அவளுடன் அவள் மன உறுதியை மீட்டுத்ததருகிறான்.இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள்.வாசுவைப்போன்றும் இருக்கிறார்கள்.சரயு வாசுவை கேட்கும் கேள்விகள்,வாசுவின் அப்பா தன் ஜாதியை ஒதுக்கி சரயுவுக்கு ஆறுதலா நிற்பது எல்லாம் அசத்தல்.தான்வி கதையை படிக்கணும்.
************************************************************************
7. விமர்சகர்; அம்மு ராதிகா.
Deepa Senbagam உங்க பாண்டிக் குடும்பம் in மனச தாடி என் மணிக்குயிலே கதை super. நிறைய Characters இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் equal part கதையில கொடுத்துயிருக்கீங்க. இந்த கதையை படித்த பொழுது ஒரு கூட்டு குடும்பத்தை அருகில் யிலிருந்து பார்த்தது போல் இருந்தது … நல்ல கதை கொடுத்தற்கு மிக்க நன்றி ❤️🌹❤️🌹❤️🌹
*******************************************************************
8. விமர்சகர். கோகிலா பல்ராஜ்.
மனசை தாடி என் மணிக்குயிலே
மண் மனம் கமழும் அழகிய கிராமிய பின்னணியில் நகரும் கதை
கதாபாத்திரங்களின் படைப்பும், கதை நகர்வும் நேர்த்தி
பெண்ணின் மறுமணம் அதன் பின்னணி, அதை கையாளும் விதம் அருமை
ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின் கான்செப்ட் இல்லாது கதைக் கருவே கதாநாயகன்
சந்திரா, மாயன், செல்லம்மாள், செல்வமணி, துரை, தங்கம் மனதை கொள்ளை கொண்டனர்
எதார்த்தமான கதை, அழகான வசனங்கள் வாழ்த்துகள்
குறிப்பிடத்தக்க விஷயம் எங்கேயும் மதுரை வழக்கு மிஸ் ஆகல, அதே போல் பெயர்கள் மிஸ் பண்ணலை (நிறைய கதாபாத்திரங்கள இருந்த போதும்)
💐💐💐💐💐
***********
Comments
Post a Comment