மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.  



நாயகன்: முத்துப் பாண்டி , ஹரிஷ் விருமாண்டி 
நாயகி: சிவப்ரியா , ஐஸ்வர்யா 

கதை திரி ; 


கதை ;

பாண்டிக் குடும்பத்தின் மூன்றாவது கதை. முந்தைய இரண்டு கதைகள் நடக்கும் காலத்திலிருந்து , ஏழு வருடம் கழித்து நடைபெறும் கதை. 
இதில் பாண்டிக் குடும்பத்தின், வீரபாண்டியன் மகன், பூங்குயிலின் தம்பி முத்துப் பாண்டி  நாயகன்.  துரை  பாண்டியன் மகள் ஐஸ்வர்யா மற்றொரு நாயகி. இவர்கள் இருவரின் திருமணம் யாருடன் நடக்கிறது , எப்படி நடக்கிறது, குடும்ப பகை ஆகியவை சுற்றியே கதை நகரும் . 

ஒரே குடும்பம் என்பதால், முந்தைய கதையின் நாயகன் , நாயகிகளும் இதில் வருவர். 

காதல் திருமணம், தலைமறைவு, தேடுதல் வேட்டை, பஞ்சாயத்து, கடத்தல், கட்டாய  திருமணம், குடும்ப பகை, தனி பகை என எல்லாவற்றையும்  பாண்டிக் குடும்பம் எப்படி கையாள்கிறார்கள் என்பதே கதை. 

விமர்சனங்கள். 

விமர்சகர்; ரெனிலா ஏஞ்சிலின் ராஜ். 

தீபா செண்பகத்தின்
"மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே"
பாண்டி குடும்பத்தின் மூன்றாவது கதை.
முதலில்- மனச தாடி மணிக்குயிலே
இரண்டாவது- தான்வி கல்யாண வை போகமே
மூன்றாவது- மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.
பெரிய கதைகள்.. ஆனால் பாண்டி குடும்பத்தோடு வாசிப்பவர் அனைவரையும் கட்டிப்போட்டது 100% உண்மை.
கதையின் சிறப்பே கதைமாந்தர்களின் எண்ணிக்கை.
இவர்களில் ஒருவரையும் மறக்காமல் நம் நினைவில் இருத்தியது தீபாவின் எழுத்து திறமை.
மதுரை கிராமத்து மண்ணின் சொல்லாடல்,பண்டிகைகள்,உறவுகளின் பிணக்கும் இணக்கமும் , இளையர் முதல் பெரியவர்களின் பாசம் அக்கறை பரிதவிப்பு காதல் கேலி என சுற்றி சழன்றடித்திருக்கிறார் ஆசிரியர்.
மணிக்குயிலில் குடும்ப பாசம்
தான்வி யில் கல்யாண கலாச்சாரம்
பைங்கிளியில் காதல்
என பன்முகம் காட்டி தான் ஒரு திறமையான கதாசிரியர் என நிறுபித்துள்ளார்.
செல்வத்தின் காதலும் குடும்பத்தின்பாசமும் சிறப்பு.
தான்வி தங்கத்தின் பதவியும் திருமணமும்
அருமையான
விவரிப்பு.
சிவப்பிரியாவின் காதலும் முத்துவின் மயக்கமும் அருமை.
இவை அனைத்திற்கும் குடும்பத்தின் ஒத்துழைப்பும் அவர்களின் அணுகுமுறையும் நம்மையும் அக்குடும்பத்தின் அங்கத்தினராக்குகிறது.
நல்ல கதையமைப்பு
அருமையான
அட்டகாசமான வார்த்தை வரிகள்
நிச்சயமாக தங்களின் அபார முயற்சிக்கு பாராட்டுக்கள்.
இம்மூன்று கதைகளும் புத்தகமாக வெளிவர
வாழ்த்துக்கள்
தீபா.
*****************************************
*****************************************

Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மனச தாடி என் மணிக்குயிலே