Posts

Showing posts from 2021

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

Image
மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே .   நாயகன்: முத்துப் பாண்டி , ஹரிஷ் விருமாண்டி  நாயகி: சிவப்ரியா , ஐஸ்வர்யா  பாண்டிக் குடும்பம் கதை திரி ;  மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -பாகம்-1 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -பாகம்-2 கதை ; பாண்டிக் குடும்பத்தின் மூன்றாவது கதை. முந்தைய இரண்டு கதைகள் நடக்கும் காலத்திலிருந்து , ஏழு வருடம் கழித்து நடைபெறும் கதை.  இதில் பாண்டிக் குடும்பத்தின், வீரபாண்டியன் மகன், பூங்குயிலின் தம்பி முத்துப் பாண்டி  நாயகன்.  துரை  பாண்டியன் மகள் ஐஸ்வர்யா மற்றொரு நாயகி. இவர்கள் இருவரின் திருமணம் யாருடன் நடக்கிறது , எப்படி நடக்கிறது, குடும்ப பகை ஆகியவை சுற்றியே கதை நகரும் .  ஒரே குடும்பம் என்பதால், முந்தைய கதையின் நாயகன் , நாயகிகளும் இதில் வருவர்.  காதல் திருமணம், தலைமறைவு, தேடுதல் வேட்டை, பஞ்சாயத்து, கடத்தல், கட்டாய  திருமணம், குடும்ப பகை, தனி பகை என எல்லாவற்றையும்  பாண்டிக் குடும்பம் எப்படி கையாள்கிறார்கள் என்பதே கதை.  விமர்சனங்கள்.  விமர்சகர்; ரெனிலா ஏஞ்சிலின் ராஜ்.  தீபா செண்பகத்தின் "மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே" பாண்டி குடும்பத்தின் மூன்றாவது கதை

தான்வி கல்யாண வைபோகமே.

Image
  தான்வி கல்யாண வைபோகமே. (பாண்டிக்கு குடும்பம் ) நாயகன் : தங்கப் பாண்டியன் IPS  நாயகி: தான்வி IAS  பாண்டிக் குடும்பம் கதை திரி-லிங்க்.  தான்வி கல்யாண வைபோகமே- part-1 தான்வி கல்யாண வைபோகமே-part-2 தான்வி கல்யாண வைபோகமே ! பாண்டிக்குடும்பத்தின் வீர மகன், மதுரை மண்ணின் பாசக்காரன், எங்கள் அன்பு மீசைக்காரன் ,தங்கப் பாண்டியன் ips, வடக்கில் காவல் துறை பணியில் இருக்கிறான், அவன் தன்னோடு உடன் படித்த பிராமணப் பெண் தான்வி ias, ஐ விரும்புகிறான். சாதி பிடிப்புக்கு கொண்ட பாண்டிக் குடும்பம் அதனை எதிர்க்கிறது, வருடங்கள் காத்திருந்து, இருவீட்டாரையும் சம்மதிக்க வைத்து, ஆட்சி பணியில் உள்ள அலுவலர்கள், தங்கள் அலுவலக சவால்களையும் எதிர் கொண்டு  எப்படி திருமணம் முடிக்கிறார்கள், என்பதே தான்வி கல்யாண வைபோகமே.  இதில் மதுரை மண்ணின்  அலப்பறையான திருமண அட்ராசிட்டிகள், ப்ளெக்ஸ், மேளம் , கொட்டு அடித்து, மாமன் சண்டை என ஒரு பக்கம் களை  கட்ட, அய்யங்கார் குடும்பத்தின் வைதீக சடங்கோடு தீவிரவாதிகள் அச்சுறுத்தலோடு எப்படி நடந்தேறும் தான்வி கல்யாண வைபோகம். இது ஒரு திருமண  லைவ் ரிப்போர்ட். அதன் நீளம் கருதி இரண்டு பாகமாக தந்து உள்ள

மனச தாடி என் மணிக்குயிலே

Image
  மனச தாடி என் மணிக்குயிலே  கதையின் திரி - அமேசான் link  மனச தாடி மணிக்குயிலே-link கதை பற்றி.... நாயகன் ; செல்வமணி  நாயகி; பூங்குயில்  மனச தாடி என் மணிக்குயிலே ! இந்த தலைப்பே செல்வமணி ,பூங்குயில் கதாபாத்திரங்களுக்காக உருவாக்கப் பட்டது தான்.  மறுமணம் -என்பதை கதை கருவாக கொண்டு புனைய பட்ட கதை. இதிலிருந்து கிடைத்த அட்சயபாத்திரம் தான் பாண்டிக் குடும்பம்.  பாண்டிக் குடும்பம்  - இந்த திரியில் நீங்கள் மொத்த பாண்டிக்கு குடும்பத்தையும் காணலாம்.  மணிக்குயில் , எனது மூன்றாவது படைப்பாக இருந்தாலும், என்னை வாசகர்கள் மத்தியில் அழைத்துச் சென்றது இந்த கதை. எனக்கான தனி அடையாளத்துக்கு நங்கூரமிட்டதும் இந்த கதை தான்.  தென்கிழக்கு சீமையின் இயல்பான சொல்லாடல்கள், பேச்சு வழக்கு, அந்த மக்களின் வாழ்க்கை முறை , கூட்டுக்  குடும்பம் ,ஆகியன இதன் சிறப்புகள்.  பாண்டிக் குடும்பம்  - மணிக்குயில் -காணொளி  மனச தாடி மணிக்குயிலே- விமர்சனம் - தொகுப்பு.  1.விமர்சகர்: அலமு பழநியப்பன்.  தீபா செண்பகம் அவர்களின் "மனச தாடி என் மணிக்குயிலே" மனதை , ஆரம்பித்த மூன்று அத்தியாயங்களிலேயே கொடுத்தாச்சு பா. தூங்கா நகரத்தை களமாகக் க

பாண்டிக் குடும்பம்

Image
 பாண்டிக் குடும்பம்  பாண்டிக் குடும்பம்.  பாண்டிக் குடும்பம், மண்ணின் மைந்தர்களாகிய மதுரை மக்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு உசிலம்பட்டி வட்டார பேச்சு வழக்கு மொழியோடு புனையப்பட்ட கதை .  ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில், தாத்தா, அப்பத்தா அவர்களது ஆறு பிள்ளைகள், அவர்களது வாரிசுகள் என் விரிந்த குடும்பத்தின் முழு நீள குடும்ப சித்திரம் , பாகங்களாகத் தொடர்கிறது.  பாண்டிக்கு குடும்பத்தின் வாழ்வியல் முறை, அவர்கள் பிரச்சனைகளை அணுகும் விதம், அதன் அதிரடி தீர்வு.  அதனை நடைமுறைப் படுத்தும் விதம். நடுவே மண்ணின் மக்களுக்கே உரியக் கேலி கிண்டலோடான உரையாடல்கள் என எப்போதும் கலகலப்பானது இந்த பாண்டிக்கு குடும்பம்.  “மனச தாடி என் மணிக்குயிலே “ மறுமணம் பற்றிய கதைக் கருவுடன் களம் இறங்கிய எனக்குக் கிடைத்த , அட்சய பாத்திரம் இந்த பாண்டிக் குடும்பம்.  இதனைத் தொடர்ந்து , தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள் என நான்கு தொடர்கள் இணைய பதிப்பாகவும், நோஷன் ப்ரெஸ்ஸில் அச்சு பதிப்பாகவும்  வந்து விட்டது.  இதில் முதல் இரண்டு கதைகளும் இரட்டை கதைகள்.  இரட்டை கதையைப் பற்றி சிலவரிக