பாண்டிக் குடும்பம்

 பாண்டிக் குடும்பம் 



பாண்டிக் குடும்பம். 

பாண்டிக் குடும்பம், மண்ணின் மைந்தர்களாகிய மதுரை மக்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு உசிலம்பட்டி வட்டார பேச்சு வழக்கு மொழியோடு புனையப்பட்ட கதை .  ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில், தாத்தா, அப்பத்தா அவர்களது ஆறு பிள்ளைகள், அவர்களது வாரிசுகள் என் விரிந்த குடும்பத்தின் முழு நீள குடும்ப சித்திரம் , பாகங்களாகத் தொடர்கிறது. 


பாண்டிக்கு குடும்பத்தின் வாழ்வியல் முறை, அவர்கள் பிரச்சனைகளை அணுகும் விதம், அதன் அதிரடி தீர்வு.  அதனை நடைமுறைப் படுத்தும் விதம். நடுவே மண்ணின் மக்களுக்கே உரியக் கேலி கிண்டலோடான உரையாடல்கள் என எப்போதும் கலகலப்பானது இந்த பாண்டிக்கு குடும்பம். 


“மனச தாடி என் மணிக்குயிலே “ மறுமணம் பற்றிய கதைக் கருவுடன் களம் இறங்கிய எனக்குக் கிடைத்த , அட்சய பாத்திரம் இந்த பாண்டிக் குடும்பம். 

இதனைத் தொடர்ந்து , தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள் என நான்கு தொடர்கள் இணைய பதிப்பாகவும், நோஷன் ப்ரெஸ்ஸில் அச்சு பதிப்பாகவும்  வந்து விட்டது. 



இதில் முதல் இரண்டு கதைகளும் இரட்டை கதைகள். 

இரட்டை கதையைப் பற்றி சிலவரிகள் 


“மனச தாடி என் மணிக்குயிலே” மற்றும் “ தான்வி கல்யாண வைபோகமே” எனும் இந்த இரண்டு கதைகளும், இணை கதைகள், இரட்டை கதைகள். மதுரை மண்ணின் மணம் கமழும், மண்ணின் மைந்தர்கள் நிறைந்த பாண்டிக்  குடும்பம் . இவர்கள் தான் கதையின் கதாபாத்திரங்கள்.பாண்டி குடும்பத்து மகள் பூங்குயிலின் மறுமணம் பற்றிய கதை மனச தாடி மணிக்குயிலே எனில்  அவள் பெரியப்பா மகன் தங்கப்பாண்டியன் IPS கலப்பு மணம் பற்றியது மற்றொரு கதை. இரண்டும் ஆறு மாத காலத்தில் ஒரே குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள். ஒன்று மற்றொன்றைச் சார்ந்து , அண்ணன் ,தங்கை வாழ்வில் நடக்கும் கதை. 




தான்வி கல்யாண வைபோகமே ! பாண்டிக்குடும்பத்தின் வீர மகன், மதுரை மண்ணின் பாசக்காரன், எங்கள் அன்பு மீசைக்காரன் ,தங்கப் பாண்டியன் ips, வடக்கில் காவல் துறை பணியில் இருக்கிறான், அவன் தன்னோடு உடன் படித்த பிராமணப் பெண் தான்வி ias, ஐ விரும்புகிறான். சாதி பிடிப்புக்கு கொண்ட பாண்டிக் குடும்பம் அதனை எதிர்க்கிறது, வருடங்கள் காத்திருந்து, இருவீட்டாரையும் சம்மதிக்க வைத்து, ஆட்சி பணியில் உள்ள அலுவலர்கள், தங்கள் அலுவலக சவால்களையும் எதிர் கொண்டு  எப்படி திருமணம் முடிக்கிறார்கள், என்பதே தான்வி கல்யாண வைபோகமே. 


இதில் மதுரை மண்ணின்  அலப்பறையான திருமண அட்ராசிட்டிகள், ப்ளெக்ஸ், மேளம் , கொட்டு அடித்து, மாமன் சண்டை என ஒரு பக்கம் களை  கட்ட, அய்யங்கார் குடும்பத்தின் வைதீக சடங்கோடு தீவிரவாதிகள் அச்சுறுத்தலோடு எப்படி நடந்தேறும் தான்வி கல்யாண வைபோகம். இது ஒரு திருமண  லைவ் ரிப்போர்ட். அதன் நீளம் கருதி இரண்டு பாகமாக தந்து உள்ளேன்.




 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே. 

இதில் நாயகன் முத்துப்பாண்டி . அவன் கவிப்ரியா என்ற பெண்ணை காதலித்து, பரிசம் போட்ட நிலையில் அவள் பிரிந்து  விட,மீலாத் துயரில் இருக்கும் அவனை சிவப்ரியா  கதை. 

மற்றொரு ஜோடி ஐஸ்வர்யா, ஹரிஷ் விருமாண்டி. மருத்துவனான ஹரிஷ், குடும்ப பகை காரணமாக , தான் விரும்பும் அத்தை மகளையே கடத்தி மனம் புரிவது. 

காதல் திருமணம் , கட்டாய திரு மணம் ,  பஞ்சாயத்து,பழிவாங்கல் , குடும்ப பகை என பயணிக்கும் கதை. பாண்டிக் குடும்பம் இதனை எப்படி கையாள்கின்றனர் என்பதே கதை. 

ராகம் தேடும் வானம்பாடிகள் 

மற்றுமொரு ஆறு வருட கால இடைவேளைக்கு பின், தினேஷ் பாண்டியனை நாயகனாக வைத்து , பாண்டிகுடும்பத்தின் பங்காளி துரை குடும்பத்தையும் இணைத்து புனையப்பட்டது. 

பாண்டிகுடும்ப பெண்வழி வாரிசான செல்லமுத்து மற்றும் இருவர்  என மூன்று  கொலை செய்த குற்றத்திற்காக இருபத்திரண்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரங்கதுரை, செல்வமணி வீட்டில் வளரும் செல்லமுத்து மகள் மீனா, ரங்கதுரையை பழிதீர்க்க காத்திருக்கும் அவன் தங்கை நிர்மலா, அவருக்கு பின் இருக்கும் ஒரு கூட்டம் என பகை, பழிவாங்குதல்,கடத்தல்,  காதல், குடும்பம், ஆலய கும்பாபிஷேகம் என பயணிக்கும் கதை. 


இந்த தொடர்களைத் தனிக் கதைகளாகவும் வாசிக்கலாம். அடுத்தடுத்து வாசிக்கும் பொழுது, இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். 





கதை திரிகள்

1.மனச தாடி என் மணிக்குயிலே 

2. தான்வி கல்யாண வைபோகமே 



3. மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே. 


கதாபாத்திரங்கள்-பாண்டிகுடும்பம் 

மூத்ததலைமுறை

கருத்த பாண்டியன்-தாத்தா (முன்னாள் எம்.எல்ஏ)

பேச்சியம்மாள் - அப்பத்தா.

அடுத்த தலைமுறை. 

  1. சிவபாண்டியன் - மனைவி  சந்திரா 

மூத்த மகன்

1) செல்லப்பாண்டியன் -மனைவி மலர்க்கொடி 

பேரன்- ஹரிஷ் பாண்டி  

பேத்தி- ஹரிணி 

            2) இளையமகன்.

ஜெயபாண்டியன்- மனைவி பூமா.

பேரன்- பூபேஷ் பாண்டி

பேரன்- முகேஷ் பாண்டி.


  1. செல்லம்மாள்- காத்தமுத்து. 

          1)மூத்த மகள். செல்லமுத்து பேத்தி  மீனா . 

          இளைய மகன் 

          2)செல்வமணி- 

           மனைவி பூங்குயில் -

         பேத்தி- மதியழகி 

         பேரன்- மதிவேந்தன் 

         பேரன்- மகிழ்ந்தன் 


  1. இராஜ பாண்டியன் -கௌசல்யா. 

            மூத்த மகன் 

            1).மருது பாண்டியன்- சுமித்ரா. 

            பேரன்  ஹித்தேஷ் பாண்டி. 

            2).இளைய மகன். 

            தங்கப் பாண்டியன் IPS. மனைவி தான்வி IA S

              பேரன்- கௌசிக் பாண்டியன். 

              பேத்தி- ராகசுதா @ ராகவி

           3). மகள் 

           அனுராதா-  கணவன் மாதவன். 

            பேத்தி அரசி. 

             பேரன் - கிஷோர். 


  1. வீரபாண்டியன்- அசோதை.

         1). மூத்த மகள் 

             பூங்கோதை- விருமன் 

             ஆதி சிவா.

        2). இளைய மகள்.

             பூங்குயில்- நாயகி.- முதல் திருமணம் வாசு தேவன் /

            மறுமணம் -செல்வமணி.      பேத்தி மதியழகி. 

            பேரன்- மதிவேந்தன். 

           பேரன்- மகிழ்ந்தன்


       3) இளைய மகன் முத்துப் பாண்டி.

            மனைவி - சிவப்ரியா 
             மகன்- அன்பேஸ் பாண்டி.
             மகள் - கவிதர்ஷினி 
  1. சோலையம்மா- மாயத்தேவன். 

             1).மூத்த மகன் வாசுதேவன்.   பூங்குயிலை முதல் மணம்)

                மனைவி சரயு.

                பேரன் சரண்தேவா. 

                பேரன்- சத்யதேவா. 

            2). இளைய மகள் - அனுசுயா- கணவன். 


  1. துரை பாண்டியன்- செல்வி  

            1).மகன் தினேஷ் பாண்டி.        

2).மகள் ஐஸ்வர்யா- கணவன் ஹரிஷ் விருமாண்டி

மகன்- பர்வேஸ் விருமாண்டி




Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே