விதைப் பயணம்
விதைப் பயணம்
மண் துளைத்து வெளிவந்து
முளை விட்டுத் துளிர்த்து
செடியாகும் முயற்சியில்
முன்னேறும் விதைப் பயணம்!
இன்னும் இரண்டு இலை
சேரட்டும் ,செடி என தன்னை
அறிவித்துக்கொள்ள
சிறிது வளர்ந்த பின்னே
விதைத்தவனும்
நீர் வார்த்தவனும்
அறியாமல் அவன்
கண் மறைத்து
இலைகள்,கிளைகள்
சில மொட்டுகள் பூ வென
சடுதியில் வளர்ந்துவிடும்!
முளை விடும் போதே
பச்சையம் தயாரித்து
தானே பசியார அறிந்தது
பருவம் வரும் போது
பக்குவமாய் காய்த்து
கனிந்து மனம் பரப்பும்
விதைப் பயணம் !
விண் தொடும் முயற்சி போல்
விரைந்து வளர்ந்து நிற்க
படர்ந்த அதன் உருவில்
பசியாறியவை பல உயிர்கள்
கூடு தேடியவை பல உயிர்கள்
பல்லுயிர்கள் நலம் நாடும்
பயனுள்ளதாய் வடிவெடுத்த
விதைப் பயணம் போல்
கனிந்து வீழ்ந்தும்
விருட்சமாய் புணர்ஜென்மம்
எடுக்கும் விதைப் போல்
பயனுள்ளதாய் அமையட்டும்
மனிதப் பயணம்!
Comments
Post a Comment