பிச்சி மகள்

 

பிச்சி மகள் 


அவளைப் பார்த்தது பல வருடங்கள் முன்பு பதிந்தது அந்த உருவம் பசைபோல் மனதில் வீதியில் வலம் வரும் அநாதை -அபலை அவள் மானம் காத்துக் கொள்ளவும் மதியில்லா மங்கை ! கிழிந்த ஆடையில் மகிழ்ந்து திரியும் நங்கை சுற்றித் திரியும் விழிகளில் - திக்கற்ற பார்வை பசிக்கு உணவுப் பாதையிலிருந்தாலும் போதும் படுத்து உறங்கக் கோவில் மரத்தின் மேடை! வினைப் பயனாய் வீணே சிரித்து விருந்தானாள் பேதை ஒருநாளில் ஓராயிரம் முறை பூனை நடை பயில்வாள் அந்நகர் வீதிகளை நடையாய் நடந்து அளந்து சலிப்பாள் அப்பகுதி மக்களுக்கு அவளும் ஓர் அசையும் அடையாளம் ! தினமும் திரிவதால் மிச்சம் சொச்சம் போட்டு காட்சிப் பொருளாய் கண்டு கதை பேசும் பொருளாய் ஒரு சீவன் உண்டு என்ற வரையில் பரிட்சயம் மாதங்கள் உருண்டோட அவளிடம் ஒரு மாற்றம் ! பிறை நிலவாய் வளர்ந்தது அவள் வயிறு -மேடிட்டு அப்பகுதி அம்மணிகளின் மனம் அதிர்ச்சியுற்றது! பிச்சியையும் விட்டுவைக்கா பேதைமை உலகம் தன் காம இச்சைக்குக் கெட்டழியும் கயவர் உலகம் ! தன் மதி அறியாதவளைத் தாயாக்கிய பாதகர் நிறை அயோக்கிய ஆடவர் உலகம் அடுக்குமோ இது ! அப்பனே அவனவனுக்குத் தக்க தண்டனை தாரும் நீதியரசாய் நின்று நெற்றிக் கண்ணால் சுட்டெரியும் ! பிள்ளை வரம் வேண்டி தவமிருக்கும் தம்பதி பலரிருக்க அனாதையாய் திரியும் பிச்சி வயிற்றில் பிள்ளை வரம் ! பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்தாள் ஓர் பெண் மகவு கன்றுதனை ஈண்ட பசுவும் பாசம் வைக்கும் குட்டியிடம் ! அந்த ஐந்தறிவும் இன்றி அலைந்தால் அந்த பிச்சி ஏற்றி நின்ற கருவையும் புரிந்தால் இல்லை ! இறக்கிவைத்த மகவையும் அறிந்தால் இல்லை! வழக்கம் போல் சில தினம் சென்று வீதி வழிப் பயணம் ! பிரசவம் பார்த்த செவிலி பிள்ளை வரம் வேண்டி நின்ற ஓர் தம்பதியிடம் சேர்பித்து தன் கடனை நேர் செய்யப் பிச்சி மகள் என நதிமூலம் மறைந்து நற்குடி பிறப்பாய் நற் பெற்றோர் நல் மகளாய், ஊற்று- நீராய் வளர்கின்றாள் , பிச்சி மகள் !



Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே