மணிக்குயில்- கவிதைச் சரம்-1

   மணிக்குயில்- கவிதைச் சரம். 



உன்மத்தம் ஆகுதடி!
உன் ஓரவிழிப் பார்வை, 
உள்ளம் உரசிச் செல்கையில், 
அன்பெனும் செல்வத்தையே 
அகமெல்லாம் நிறைத்தவனின் 
உள்ளமது  - அவள் உள்ள மனது
உன்மத்தம் ஆகுதடி.  


குயிலோசையில் மனம் லயித்தவர், 
ஆயிரமமாயிரம்  உண்டு. 
பூங்குயில் ஓசையில் மனம் தொலைத்தவன் 
அவன்  மட்டுமே! 
அவளின் ...
ஆசை மாமன் மட்டுமே!

"மாமா" எனும், 
அவள் சொல்லோசையில் ,
மது உண்டு  
மயங்கி நின்ற 
மதி போல் ...
உள்ளமது  - அவள் உள்ள மனது
உன்மத்தம் ஆகுதடி.  


சேயாய் அவளிருக்கையிலேயே 
சுகமாய்  தூக்கிச் சுமந்தவன், 
தளிராய் அவள் நடக்கையில் 
விழாமல் தாங்கிப் பிடித்தவன், 
அவள் பள்ளிச் செல்கையில் 
காவலனாய் சேவகம் செய்தவன், 
கொள்ளை அழகாய் - அவன் மனதை 
கொள்ளைக் கொண்ட அழகாய்,
அவளைப் பார்க்கையில் 
உள்ளமது  - அவள் உள்ள மனது
உன்மத்தம் ஆகுதடி.  


பூவாய்  மலர்ந்தவளுக்கு 
குச்சுக் கட்டி
குடிசை தந்தவன் !

பச்சை ஓலை வழியே 
பசும் மஞ்சள் பூசி 
மருண்ட விழியோடு 
பூத்து நின்றவளை,
கண்ட நாள் முதல் ...

அவன் உள்ளம் துளைத்து 
உள்ளமதில் குடி புகுந்தவளை 
நினைவில் நிறுத்துகையில் ,
உள்ளமது  - அவள் உள்ள மனது
உன்மத்தம் ஆகுதடி.  

மஞ்சள் பூசிய மலர் விழியாளின்
மயக்கும் ஓர் பார்வையில் 
மதி மயங்க காத்திருந்தவனை!

"மாமா" என்றழைப்பில் 
மனம் கிறங்க தவமிருந்தவனை 
கண்டும் காணாமல் அவள் 
கடந்து போகையில் 

உள்ளமது  - அவள் உள்ள மனது
உன் மத்தம் ஆகுதடி!


(மனச தாடி மணிக்குயிலே- பாண்டிக் குடும்ப கதை , நாயகன், நாயகி- செல்வமணி- பூங்குயில் .
அவர்கள், காதல் கதைக்கான கவிதைச் சரம்.
இந்த மாதம் முழுவதும், என் கதை மாந்தர்களுக்காக கவிதைச்சரம் தொடுக்கிறேன். வாசித்து விமர்சனம் தாரீர். )

Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே