கோபாலா நீ வாராய்!

  

கோபாலா நீ வாராய்!

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் இல்லை 

ஆதரவு தந்து மகிழ்ந்த  ஆயர்குலமும் இல்லை 

ஆறு குளம் எரியும் பசும் புல்லும் இல்லை 

பால் தரும் பசுக்கள் பதறுகின்றன 

கோபாலா நீ வாராய்!


காய்ந்த புல்லும்  வைக்கோலும் கிட்டுமோ 

தன்  வயிறு நிரப்பி மடி நிறைத்துப் 

பிறந்த கன்றுக்குப் பால் புகட்ட -எனும் 

ஏக்கத்தில் பசுக்கள் மறிகின்றன 

கோபாலா நீ வாராய்!


வெண்மைப் புரட்சியென விதவிதமாய் 

வெள்ளைத் திரவங்கள் செயற்கைப் பைகளில் 

அடைத்து வர அரிதாகிப் போகுமோ 

வெள்ளை,கறுப்பு பழுப்புப்  பசுக்கள் 

கோபாலா நீ வாராய்!


காய்ந்த புல்லுக்கும் கடும் பஞ்சம் 

காகிதமும் செயற்கை இலைகளும் 

ஆகாரமாய் காளைகள் உண்டால் 

குடல் கிழியுமோ மலடாகுமோ 

கோபாலா நீ வாராய்!


பால் சுரக்கும் மடி வறண்டால் வேண்டாத 

சுமையென மலையாளக் கரை ஒதுக்கிக் 

காவு தந்துவிடுகிறான் பாவி மகன் 

நீ ஆதரித்த இனம் அழிந்துவிடாமல் 

கோபாலா நீ வாராய்!


குடிமக்கள் குறை தீர்க்க வேண்டாம் 

"கோ" இனம் காத்திட வா கோபாலா 

உன் வருகைக்கு ஏற்ற தருணம் 

அரக்கர்களுக்கும் குறைவில்லை 

 கோபாலா நீ வாராய்!




Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே